இதை மட்டும் செய்தால் போதும்! மாதந்தோறும் ரூ. 75000 ஓய்வூதியம் கிடைக்கும்!

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) மாதம் ரூ.75,000 முதலீடு செய்யும்போது முதலீட்டாளர் அவரது 60 வயதில் ரூ.3.83 கோடியை பெற முடியும்.   

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 11:48 AM IST
  • சிறந்த வருமானம் பெறவு அரசாங்கத்தின் முதலீட்டு திட்டங்கள் நமக்கு உதவுகின்றன.
  • என்பிஎஸ் திட்டத்தில் பிபிஎஃப் நிலையான வைப்புகளை விட அதிக வருமானம் கிடைக்கிறது.
  • ரூ.75,000 முதலீடு செய்யும்போது முதலீட்டாளர் அவரது 60 வயதில் ரூ.3.83 கோடியை பெறுவார்.
இதை மட்டும் செய்தால் போதும்! மாதந்தோறும் ரூ. 75000 ஓய்வூதியம் கிடைக்கும்! title=

அரசாங்கம், வங்கிகள் மற்றும் பல நிதி நிறுவனங்கள் பல்வேறு விதமான சலுகைகளுடன் முதலீட்டு திட்டங்களை மக்களுக்கு வழங்குகின்றன.  இதுபோன்ற முதலீட்டு திட்டங்களில் மக்கள் பணத்தை டெபாசிட் செய்வதற்கான முக்கிய காரணம் அவர்களது எதிர்கால நிதி தேவைகளை சமாளித்துக்கொள்வதற்கு தான், அவ்வாறு டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர்.  அப்படி நமது பணம் பாதுகாப்பாகவும், சிறந்த வருமானம் பெறவும் அரசாங்கத்தின் முதலீட்டு திட்டங்கள் நமக்கு உதவுகின்றன.  அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) சிறந்த முதலீட்டு திட்டமாகவும், வயதான காலத்தில் நிலையான ஓய்வூதியத்தை தரக்கூடிய ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது, இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம்தோறும் நிலையான ஓய்வூதியத்தை பெற முடியும்.

மேலும் படிக்க | Alert: அக்டோபர் 1 முதல் ‘இந்த’ விதிகளில் முக்கிய மாற்றம்

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக கருதப்படுகிறது.  என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு பிபிஎஃப் நிலையான வைப்புகளை விட அதிக வருமானம் கிடைக்கிறது.  இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு  ஆக்டிவ் மற்றும் ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வழிகளில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.  முதலீட்டாளர்கள் ஆக்டிவ் சாய்ஸில் அவர்களது பணத்தை பங்குகள், அரசுப் பத்திரங்கள் போன்ற முறைகளில் முதலீடு செய்யலாம், என்பிஎஸ் முதலீட்டில் 75% ஆக்டிவ் சாய்ஸில் முதலீடு செய்யலாம்.  

இத்திட்டத்தில் மாதம் ரூ.75,000 முதலீடு செய்யும்போது முதலீட்டாளர் அவரது 60 வயதில் ரூ.3.83 கோடியை பெறுவார்.  இப்போது 25 வயதான ஒருவர் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 வீதம் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்கிறார் எனில் அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% வருமானத்துடன், 60 வயது முடிவில் ரூ.3,82,82,768 கிடைக்கும்.  இந்த மொத்த தொகையில் 40% வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யும்போது அவருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.76,566 கிடைக்கும்.  அதுவே 30 வயதானவர்கள் என்பிஎஸ் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.16,500 முதலீடு செய்தால் அவருக்கு மாதந்தோறும் ரூ.75,218 ஓய்வூதியமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | இனி பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News