தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: இன்று, ஆகஸ்ட் 10, 2023 அன்று, சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நீங்களும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான ஒரு முக்கியமான செய்தி உள்ளது. bankbazar.com இன் அறிக்கையின்படி, இன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் (தங்கத்தின் விலை இன்று) தங்கத்தின் விலையில் குறைந்துள்ளது. வெள்ளியைப் பற்றி பேசுகையில், இன்று வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. எனவே 10 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளியின் விலை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்


* டெல்லி மற்றும் சென்னையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.55,100 மற்றும் ரூ.55,300 ஆக உள்ளது.


* டெல்லி மற்றும் சென்னையில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.60,110 மற்றும் ரூ.60,330 ஆக உள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது


இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்


* மும்பை, கொல்கத்தா, டெல்லியில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.73,500 ஆக உள்ளது.


* சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் இதன் விலை ரூ.76,700 ஆக உள்ளது.


தங்கத்தின் தூய்மையை எவ்வாறு கண்டறிவது
தங்கத்தின் தூய்மையைக் கண்டறிய தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பால் (International Organization for Standardization) ஹால்மார்க் வழங்கப்படுகின்றன. அதன்படி,


24 காரட் தங்க நகைகள் மீது 99.9
23 காரட்டில் 95.8,
22 காரட்டில் 91.6,
21 காரட்டில் 87.5
18 காரட்டில் 75.0 கிராம் தூய்மை எழுதப்பட்டுள்ளது.


பெரும்பாலும் தங்கம் 22 காரட்டில் விற்கப்படுகிறது, சிலர் 18 காரட்டையும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் 24 காரடுக்கு மேல் தங்கம் விற்பனை செய்யப்படுவாதில்லை. 


22 மற்றும் 24 காரட் தங்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்
24 காரட் தங்கம் 99.9 சதவிகிதம் தூய்மையானது மற்றும் 22 காரட் 91 சதவிகிதம் தூய்மையானது. 22 காரட் தங்கத்தில் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற 9% மற்ற உலோகங்களைக் கலந்து நகைகள் தயாரிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் 24 காரட் தங்கம் தூய்மையானது. 24 காரட் தங்க நகைகள் செய்ய முடியாது, எனவே பெரும்பாலான கடைக்காரர்கள் 22 காரட் தங்கத்தை விற்கிறார்கள்.


தங்கத்தின் விலையையும் உங்கள் வீட்டில் அமர்ந்து பார்க்கலாம். இந்திய புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் படி, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து விலையைச் சரிபார்க்கலாம். நீங்கள் எந்த எண்ணில் இருந்து மெசேஜ் செய்தீர்களோ அதே எண்ணில் உங்கள் செய்தி வரும். நீங்களும் சந்தையில் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால், ஹால்மார்க் பார்த்த பிறகே தங்கத்தை வாங்குங்கள். தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க அரசு செயலியையும் பயன்படுத்தலாம். 'பிஐஎஸ் கேர் ஆப்' மூலம் தங்கம் உண்மையானதா அல்லது போலியா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். இது தவிர, இந்த ஆப் மூலமாகவும் புகார் செய்யலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் எவ்வளவு? 3% அல்லது 4%? இதன் பின் உள்ள கணக்கீடு என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ