பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002 மூலம் மத்திய அரசு பணத்தைப் பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது, இந்த அதிரடி மாற்றம் 28 டிசம்பர் 2020 அன்று அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  வாடிக்கையாளரை அறிய (கேஒய்சி) விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதை கட்டாயப்படுத்தும் சட்டத்தின் கீழ் நகைத் தொழில்துறை அறிக்கையிடும் நிறுவனங்களாக நியமிக்கப்பட்டுள்ளது.  இது குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்து தங்கத்தை வாங்குபவர்களின் பான் அல்லது ஆதார் விவரங்களைச் சேகரிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.  இதுதவிர, நகைக்கடைக்காரர்கள் ரூ.10 லட்சக்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடேங்கப்பா...இந்தியாவிலேயே இந்த ஊரில் தான் சம்பளம் அதிகம் - முழு விவரம்


தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  இந்தச் சூழ்நிலையில் அடையாளச் சான்று அல்லது பான் கார்டு இல்லாமல் நகைகளை வாங்குவது தொடர்பான விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும்.  இதுதவிர ரொக்கமாக வாங்கக்கூடிய தங்கத்தின் அளவு மீது ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.  வருமான வரிச் சட்டங்களின்படி, குறிப்பிட்ட வரம்பை மீறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269ST-ன் படி, ஒரு நபரிடமிருந்தோ அல்லது ஏதேனும் ஒரு விஷயமாகவோ ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிமாற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது.  எனவே ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்கினால், வருமான வரி விதிகளை நீங்கள் மீறிவிட்டதாக கருதப்படும்.  வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 271Dன் படி, வரம்பை மீறி பணப்பரிவர்த்தனை செய்பவர்கள், ரொக்கமாக பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகைக்கு சமமான அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும்.


கேஒய்சி சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டால் தனிநபர்கள் அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு பிஎம்எல்ஏ விதிகள் அனுமதிக்கிறது.  தனிநபர் ஒருவர் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்க நகைகளை வாங்கினால், மின்னணு முறையில் பணம் செலுத்தியிருந்தாலும், அவர்கள் பான் அல்லது ஆதார் விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST, தனிநபர்கள் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தடை செய்கிறது.  எனவே, பணமாகவோ அல்லது மின்னனு மூலமாகவோ செய்யும் பரிவர்த்தனை ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் கேஒய்சி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் அரசாங்கம் இப்போது பழைய நகைகளை விற்பதற்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கியுள்ளது.  BIS இன் படி, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வைத்திருக்கும் நபர் அதை விற்பதற்கு முன் அல்லது புதிய வடிவமைப்பிற்கு மாற்றுவதற்கு முன் கட்டாயமாக ஹால்மார்க் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய நகைகளை ஹால்மார்க் செய்ய அவர்களுக்கு இரண்டு வகையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  ஹால்மார்க் செய்யப்பட்ட பழைய, ஹால்மார்க் இல்லாத நகைகளை, BIS பதிவு செய்யப்பட்ட நகைக்கடைக்காரர்களிடம் இருந்து பெறலாம்.  BIS பதிவுசெய்யப்பட்ட நகைக்கடைக்காரர், முத்திரையிடப்படாத தங்க ஆபரணங்களை ஹால்மார்க் பெறுவதற்காக BIS மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திற்கு எடுத்துச் செல்வார்.  அடுத்ததாக BIS அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையங்களில் நகைகளை பரிசோதித்து ஹால்மார்க் செய்துகொள்வது வாடிக்கையாளர்களுக்கான மற்றொரு விருப்பமாகும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ