தங்கத்தின் மீதுள்ள மோகம், தமிழக மக்களுக்கு குறைவதே இல்லை. கொரோனா நெருக்கடி சமயத்தில் கூட தங்கம் வாங்க தயக்கம் காட்டவில்லை எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய சூழ்நிலையில், தங்கம் விலை (Gold Rate)  குறைந்திருப்பது, தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தங்கம் சில வாரங்களாகவே தொடர்ந்து விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தற்போது தங்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, விலை குறைந்துள்ளது. தங்கத்தில் விலை ரூ.1,049 குறைந்து 10 கிராமுக்கு 49,618 ரூபாயாக உள்ளது.


கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து நம்பிக்கையான தகவல்கள் வருவதை அடுத்து தங்கம் விலை குறைந்துள்ளது.செவ்வாய்க்கிழமை தேசிய தலைநகரில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .1,049 குறைந்து 48,569 ரூபாயாக குறைந்துள்ளதாக எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.


தற்போது தங்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, விலை குறைந்துள்ளது. தங்கத்தில் விலை ரூ.1,049 குறைந்து 10 கிராமுக்கு 49,618 ரூபாயாக உள்ளது.


முந்தைய வர்த்தகத்தில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,618 ரூபாயாக மூடப்பட்டது.


முந்தைய வர்த்தகத்தில் ஒரு கிலோ ரூ .60,889 என்ற விலையில் விற்கப்பட்ட வெள்ளியின் விலை, ஒரு கிலோவிற்கு ரூ .1,588 குறைந்து ரூ .59,301 ஆக விற்பனை ஆகிறது


சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,830 அமெரிக்க டாலர்களாகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 23.42 அமெரிக்க டாலராகவும் இருந்தது.


சென்னையின் (Chennai) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து, ஒரு சவரன் (8 கிராம்) விலை 37,152 ரூபாயாக உள்ளது.


வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலை பலத்த வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. இன்றும் கிலோவுக்கு 572 ரூபாய் குறைந்து, 59,932 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.


கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடவடிக்கைகள் திட்டமிட்ட படி முன்னேறி வருவதால், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்னும் குறையலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.


ALSO READ | IRCTC/Indian Railways: தேஜஸ் எக்ஸ்பிரஸ் இன்று முதல் ரத்து .. காரணம் என்ன..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR