Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப சற்று இறங்கியிருந்த தங்கத்தின் விலை, மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தங்க விலையில் காணப்படும் ஏறுமுகம் நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.35,424 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.  ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.4,428 ஆக உள்ளது. 


வெள்ளியின் (Silver) விலையிலும் இன்று அதிகரிப்பு காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அதிகரித்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தேசிய அளவிலும் தங்க விலைகளில் அதிகரிப்பு தொடர்ந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் அதிகரித்தது. மும்பையில் தங்கத்தின் விலை இன்று 22 காரட்டுக்கு ரூ .44,850 ஆகவும், 24 காரட்டுக்கு ரூ .45,850 ஆகவும் உள்ளது. டெல்லியில் தங்கத்தின் விலை 22 காரட்டுக்கு ரூ .45,950 ஆகவும் 24 காரட்டுக்கு ரூ .50,120 ஆகவும் உள்ளது.


சமீப நாட்களின் ஏற்பட்ட விலை சரிவு, ஒரு தற்காலிக திருத்தம் மட்டுமே என்றும், தங்கத்தின் விலையில் (Gold Rate) வரும் நாட்களில் வீழ்ச்சி இருக்காது என்றும் கூறப்படுகின்றது. 


ALSO READ: Gold Desire: நிறைய தங்கம் வாங்கி சேர்க்க ஆசையா? இது பெண்களுக்கான பொன் விரதம்


தங்கத்தின் குறிப்பிடத்தக்க ஏறுமுகம் 2016 ஆம் ஆண்டு துவங்கியது. தங்கத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் அதன் போக்கு மேல்நோக்கியே இருக்கும் என்பது சந்தை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு துவங்கிய போக்கு இன்னும் அப்படியேதான் உள்ளது. சொல்லப்போனால், அடுத்த விலை எழுச்சிக்கான அறிகுறிகள் தற்போது தெரிய வருகின்றன.  


தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணமான பல காரணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக, பெரிய ஊக்குவிப்பு தொகுப்புகள், மிகக் குறைந்த குறுகிய கால வட்டி விகிதங்கள், குறைவான நீண்ட கால விகிதங்கள் மற்றும் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயால் குறைந்து வரும் பொருளாதார தேவை ஆகியவை அடங்கும்.


இதற்கிடையில், ஆனந்த் ரதி ஷேர் நிறுவனம், தங்கம் குறித்த மிகப்பெரிய அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியுள்ளது. இது அதிகரித்து வரும் பாண்ட் ஈல்ட், அதாவது பத்திர வருமானம் பற்றியதாகும். இது ஒரு வருடத்தில் இல்லாத அளவுகளில் தற்போது உள்ளது. 


அமெரிக்கா, பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை பதிவு செய்தால், ஏப்ரல் மாதத்தில் DX மற்றும் 10Y பத்திர வருவாய் அதிகரித்து, அதன் தாக்கம் தங்க விலையில் அதிகம் தென்படும். இருப்பினும், உச்ச வரம்புகளிலிருந்து தங்கம் இப்போது கணிசமாக குறைந்துள்ளது. ஆகையால், இந்த நேரத்தில் சில்லறை வியாபார பங்களிப்பு, ஆபரணத்  தங்கத்தின் வடிவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR