Gold Rates Today: மெல்ல மெல்ல உயரும் தங்க விலை: விரைவில் வாங்கினால் லாபம் காணலாம்

சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.12 சதவீதம் அதிகரித்து 1,734.80 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 0.40 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 6.90 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 13, 2021, 11:12 AM IST
  • தங்கத்தின் விலை தேசிய அளவில் செவ்வாயன்று லேசாக அதிகரித்தது.
  • சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 43,800 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 47,780 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
  • சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வெள்ளியின் விலை 71,900 ரூபாயாக உள்ளது.
Gold Rates Today: மெல்ல மெல்ல உயரும் தங்க விலை: விரைவில் வாங்கினால் லாபம் காணலாம்  title=

Gold / Silver Rate April 13, 2021: தங்கத்தின் விலை தேசிய அளவில் செவ்வாயன்று லேசாக அதிகரித்தது. முந்தைய நாள் வியாபாரத்தில் 4,471 ரூபாயாக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று 4 ரூபாய் அதிகரித்து ரூ .4,475 ஆனது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .44,750 ஆக உள்ளது. இது முந்தைய நாளின் விலையான ரூ .44,710 லிருந்து 40 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலையைப் போலவே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ .40 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ .45,750 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது 45,710 ரூபாயில் முடிவடைந்தது.  

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்: 

டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,700 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை இதை விட சுமார் 4000 ரூபாய் அதிகமாக ரூ .49,860 ஆக உள்ளது.

சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் (Gold)  43,800 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 47,780 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் 45,850 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 48,550 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை (Gold Price) 44,750 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 45,750 ரூபாயாகவும் உள்ளது. 

தங்கத்தின் சர்வதேச விலை:

சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.12 சதவீதம் அதிகரித்து 1,734.80 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 0.40 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 6.90 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

வெள்ளி விலை நிலவரம்:

இன்று வெள்ளி விலை 10 கிராம் 672 ரூபாயாக உள்ளது. முந்தைய விலையான 669 ரூபாயிலிருந்து வெள்ளி 3 ரூபாய் அதிகரித்துள்ளது.  

மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு: 

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் (Silver) விலை 67,200 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 71,900 ரூபாயாக உள்ளது.

ALSO READ: Gold Rates Today: உயரத் தொடங்குகிறது தங்கத்தின் விலை, இப்போதே வாங்கினால் லாபம் காணலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News