Gold / Silver Rate April 15, 2021: தங்கத்தின் விலை தேசிய அளவில் வியாழனன்று லேசாக அதிகரித்தது. முந்தைய அமர்வில் 4,476 ரூபாயாக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்து ரூ .4,485 ஆனது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .43,850 ஆக உள்ளது. இது முந்தைய நாளின் விலையான ரூ .44,760-லிருந்து 90 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலையைப் போலவே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ .90 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ .45,850 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது 45,760 ரூபாயில் முடிவடைந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ. 67.60 ஆக உள்ளது.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்:
டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை (Gold Rate) 10 கிராமுக்கு ரூ .45,950 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .50,120 ஆக உள்ளது.
சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 43,740 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 47,690 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் (Gold) 46,380 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 49,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 44,850 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 45,850 ரூபாயாகவும் உள்ளது.
ALSO READ: Gold Rates Today: மெல்ல மெல்ல உயரும் தங்க விலை: விரைவில் வாங்கினால் லாபம் காணலாம்
தங்கத்தின் சர்வதேச விலை:
சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.01 சதவீதம் அதிகரித்து 1,736.50 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 5.50 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
வெள்ளி விலை நிலவரம்:
இன்று 10 கிராம் வெள்ளியின் விலை 13 ரூபாய் அதிகரித்து ரூ.676 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது ரூ. 663 ஆக இருந்தது.
மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு:
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் (Silver) விலை 67,600 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 71,900 ரூபாயாக உள்ளது.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR