Gold: தங்க முதலீட்டிற்கும், தங்கக் கடன் வாங்கவும் சூப்பரான வழிமுறைகள்
Gold Investments In India: தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? தங்கத்தை முதலீடு செய்ய பொன்னான வழிகள் இவை... தங்கக் கடன் வாங்குவதற்கும் இதுவே அடிப்படை...
நியூடெல்லி: சுலபமாக பெறக்கூடிய கடன்களில், தங்கக் கடன் முதன்மையானது. தங்கம் என்பதை ஆசைக்கான நகைகளாக செய்வது உலகம் முழுக்க நடைமுறையாக இருந்தாலும், தங்கம் என்பது ஒரு பொன்னான முதலீடாக மட்டுமல்லாமல் அவசரத்துக்கு தேவையான பணத்தை பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும் இந்தியர்கள் பார்க்கின்றனர். இதனல் தான் தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் தலையானதாக இருக்கிறது.தங்கத்திற்கென தனி மதிப்பு இருப்பதால் எப்போதும் அதற்கான கிராக்கி இருக்கிறது.
பொருளாதார மந்த நிலை உலகம் முழுவதும் இருந்துவரும் நிலையில், மக்கள் வேலைவாய்ப்பு, தொழில் இழப்பு என வாழ்வாதார சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், முதலீடு என்று வரும்போது அது தங்கமாகவே இருக்கிறது.
அவசர தேவைக்காக தேவைப்படும் பணத்துக்காக பல வழிமுறைகள் இருந்தாலும், பிணை கொடுப்பதில் ஆவணங்கள் நடைமுறை கெடுபிடியாக இருக்கும் நிலையில், தங்கமே எப்போதும் கைகொடுக்கிறது.
மேலும் படிக்க | Bharat Jodo Yatra: ஜம்முவில் நுழைந்ததுமே சர்ச்சையில் சிக்கிய பாரத் ஜோடோ நடைபயணம்
தங்க முதலீட்டு திட்டங்கள்
அதனால் முதலீடு என்பதை, சிறிய அளவில் இருந்து மிகப் பெரிய அளவில் வரை செய்யும் வாய்ப்பைக் கொடுக்கும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இந்தியர்களுக்கு இருக்கும் சிறப்பான வாய்ப்புகள் இவை.
இந்தியாவில் தங்க முதலீட்டு திட்டங்கள்
2022-23 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு உயர்ந்து, 191.7 டன்களை எட்டியது, இது ஆண்டுதோறும் 14 சதவீதம் அதிகரித்து, முதன்மையாக அதிக நுகர்வோர் ஆர்வம் காரணமாக இருந்தது. இந்தியாவின் தங்கத்திற்கான தேவை என்பதை இது உணர்த்துவதாக இருக்கிறது.
தங்கம் இறக்குமதியைத் தடுக்கவும், வர்த்தக பற்றாக்குறையினை குறைக்கவும் தங்கத்தின் மூலம் வருமானம் ஈட்ட முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Corona Alert: XBB.1.5 தடுப்பூசி போட்டவரையும் கோவிட் பாதித்தவர்களையும் பாதிக்கும்
தங்கம் பணமாக்குதல் திட்டம்
இந்தத் திட்டத்தின் குறிக்கோள், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் வைத்திருக்கும் தங்கத்தைத் திரட்டி, உற்பத்தி நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவதை எளிதாக்குவது மற்றும் இறுதியில் தங்க இறக்குமதியில் நாட்டின் சார்புநிலையைக் குறைப்பது ஆகியவை ஆகும்.
இது தொடர்பான தற்போதைய சர்வதேச விகிதங்கள், பிற செலவுகள், சந்தை நிலவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கான வைப்புத்தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தை வங்கிகள் தீர்மானிக்கின்றன. வட்டி விகிதத்தை செலுத்துவதற்கு வங்கிகள் பொறுப்பாகும்.
ரிசர்வ் வங்கியுடன் அவ்வப்போது கலந்தாலோசித்த பிறகு நடுத்தர மற்றும் நீண்ட கால வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் தேர்வு செய்கிறது.
இறையாண்மை தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond (SGB)
SGB எனப்படும் அரசுப் பத்திரங்கள், வாங்க விரும்பும் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு வாங்குவதற்கு வழிவகை செய்கிறது. அவை தங்கத்தை, பொன் வடிவில் வைத்திருப்பதற்கு மாற்றாக செயல்படுகின்றன. முதலீட்டாளர்களுக்கான வெளியீட்டு விலை ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும், மேலும், தங்கப் பத்திரங்கள் முதிர்ச்சி அடையும் போது பணமாகவே கிடைக்கும். தங்கமாக கிடைக்காது.
இந்திய அரசின் சார்பில், ரிசர்வ் வங்கி பத்திரத்தை வெளியிடுகிறது. தங்கம் பணமாக்குதல் திட்டத்தின் கீழ், நவம்பர் 2015 இல் இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்க போறிங்களா? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!
இந்திய தங்க நாணயம்
இந்திய தங்க நாணயங்கள் 5, 10 மற்றும் 20 கிராம் எடைகளில் வழங்கப்படுகின்றன. இந்திய தங்க நாணயம் வாங்குவதற்கு பல வழிகளில் விதிவிலக்குகள் உண்டு. இது அதிநவீன கள்ளநோட்டு எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது. அனைத்து இந்திய தங்க நாணயங்களும் பொன்களும் 24 காரட் தூய்மையானவை, மேலும் அவை அனைத்தும் BIS தேவைகளுக்கு ஏற்ப ஹால்மார்க் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க கடன் கணக்கு
கிராம்களின் அடிப்படையில் தங்கத்தின் மதிப்புக்கு, நகைக்கடைக்காரர்களுக்கு தங்க உலோகக் கடன் கணக்கை வங்கி திறக்கிறது. வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்டுல்ள விதிமுறைகள் மற்றும் சூழ்நிலைகளின்படி, ரிசர்வ் வங்கியின் உதவியுடன், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஜிடிஎஸ்-ன் குறுகிய கால விருப்பத்தின் மூலம் தங்கம் நகைக்கடைக்காரர்களுக்கு கடனில் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Kerala Bumper lottery: கேரளா லாட்டரி ரிசல்ட் அறிவிப்பு, முதல் பரிசு ரூ16 கோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ