Corona Alert: XBB.1.5 தடுப்பூசி போட்டவரையும் கோவிட் பாதித்தவர்களையும் பாதிக்கும்

Covid 19 Updates: கோவிட் நோயை ஏற்படுத்தும் கொரோன வைரஸின் புதிய மாறுபாடு,முன்பை விட மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இந்த ஆபத்தில் இருந்து விலக்கு பெறவில்லை! அச்சுறுத்தும் கொரோனாவுக்கு முடிவு எப்போது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 20, 2023, 09:09 AM IST
  • மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா பிறழ்வு
  • XBB.1.5 மாறுபாடு தொடர்பான புதிய ஆய்வு
  • அச்சுறுத்தும் கொரோனாவுக்கு முடிவு எப்போது?
Corona Alert: XBB.1.5 தடுப்பூசி போட்டவரையும் கோவிட் பாதித்தவர்களையும் பாதிக்கும் title=

Dangerous Covid 19: கோவிட் நோயை ஏற்படுத்தும் கொரோன வைரஸின் புதிய மாறுபாடு,முன்பை விட மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இந்த ஆபத்தில் இருந்து விலக்கு பெறவில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. XBB.1.5 மாறுபாடு கொரோனா வைரஸ், தடுப்பூசி போடப்பட்ட அல்லது ஏற்கனவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

XBB.1.5 என்பது உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் சமீபத்திய கோவிட் மாறுபாடு ஆகும். சமீபத்தில் 38 நாடுகளில் XBB.1.5 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் (WHO) , அதில் 82% அமெரிக்காவில், 8% இங்கிலாந்தில் மற்றும் 2% டென்மார்க்கில் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட அல்லது ஏற்கனவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மாறுபாடு பாதிக்க வாய்ப்பு அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. கொரோனாவின் இந்த மாறுபாட்டைப் பற்றிய தகவல்கள் திகைப்பை ஏற்படுத்துகின்றன.

XBB.1.5 திரிபு வைரஸ்

XBB.1.5 திரிபு Omicron XBB மாறுபாட்டிற்கு நெருக்கமானது ஆகும், இது Omicron BA.2.10.1 மற்றும் BA.2.75 துணை வகைகளின் மறு இணைப்பாகும். XBB மற்றும் XBB.1.5 ஆகியவை இணைந்து அமெரிக்காவில் 44% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை
 
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம்

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் (ECDC) கருத்துப்படி, துணைவேறுபாடு தற்போது மற்ற வகைகளை விட அமெரிக்காவில் 12.5 சதவீதம் வேகமாக பரவுகிறது.

ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 30% துணை மாறுபாடுகள் இருந்தன, இது முந்தைய வாரத்தில் CDC மதிப்பிட்ட 27.6% ஐ விட அதிகமாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | Corona Pneumonia: கடுமையான நிமோனியாவை ஏற்படுத்தும் கொரோனாவின் அடுத்த அட்ராசிடி

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் ஆபத்து
NYC சுகாதாரம் மற்றும் மனநல சுகாதாரத் துறையின் சமீபத்திய ஆய்வில், XBB.1.5 என்பது, இன்றுவரை உள்ள கோவிட்-19 இன் மிகவும் கொடிய வடிவமானது என்றும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 

தடுப்பூசி பாதுகாப்பு

தடுப்பூசியை மேலும் ஊக்குவிக்க வலியுறுத்தும் NYC சுகாதாரம் மற்றும் மனநல சுகாதாரத் துறை, 'XBB.1.5 வைரஸ், கடுமையான கோவிட் நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெரியவில்லை. கோவிட் தடுப்பூசியைப் பெறுவது, அதிலும் புதுப்பிக்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசியை பெறுவது என்பது கோவிட் பாதிப்பில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இன்னும் சிறந்த வழியாகும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?
INSACOG ஆல் திங்களன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை மொத்தம் 26 XBB.1.5 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாறுபாடு இதுவரை டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பதற்கு XBB.1.5 வைரஸ் காரணமாக உள்ளது.

மேலும் படிக்க | Kerala Bumper lottery: கேரளா லாட்டரி ரிசல்ட் அறிவிப்பு, முதல் பரிசு ரூ16 கோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News