ஓய்வூதிய நிதி அமைப்பு: ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இன் கீழ் வைப்புத் தொகையை திரும்பப் பெற ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ​​அனுமதித்துள்ளது. தற்போது, ​​பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவை இருந்தால்,  இபிஎஃப்ஓ கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுக்க அனுமதி 


திங்களன்று இபிஎஃப்ஓ-வின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (சிபிடி) 232 ஆவது கூட்டத்தில், இபிஎஸ்-95 திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, ஓய்வு பெறும் வயதை நெருங்கிய சந்தாதாரர்கள் ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுக்க அனுமதிப்பதற்கான வசதியை செய்ய வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 



விகிதாசார ஓய்வூதிய பலனுக்கான பரிந்துரை


தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் மீதமுள்ள உறுப்பினர்கள் தங்கள் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று சிபிடி அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 



மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 


இது தவிர, 34 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாசார ஓய்வூதிய பலன்களை அளிக்கவும் அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த வசதியின் மூலம், ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்கும் நேரத்தில் அதிக ஓய்வூதியம் பெற முடியும்.


EPFO இன் அறங்காவலர் குழு, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) யூனிட்களில் முதலீடு செய்வதற்கான மீட்பின் கொள்கைக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இது தவிர, 2021-22 நிதியாண்டிற்கான EPFO ​​இன் செயல்பாடு குறித்து தயாரிக்கப்பட்ட 69 வது ஆண்டு அறிக்கையும் அங்கீகரிக்கப்பட்டது. இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.


மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ