இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, பல பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்களின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. அதன்படி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 7 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தனியார் துறையான ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடிக்கான எஃப்டிக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலவரையறை கொண்ட எஃப்டிகளுக்கு அதிக வட்டி செலுத்த வங்கி இப்போது முடிவு செய்துள்ளது. அதன்படி வங்கியின் இந்த முடிவால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள், ஏனெனில் ஐசிஐசிஐ நாட்டின் முக்கிய வங்கியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | LIC முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி: இதுவரை இல்லாத கீழ் மட்டத்தில் எல்ஐசி பங்கு விலை 


புதிய வட்டி விகிதங்கள் இதோ
மணிகண்ட்ரோல்.காம் இன் அறிக்கையின்படி, ஐசிஐசிஐ வங்கி இப்போது 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 3.00 சதவீத வட்டியை சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கும். அதேபோல், பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 15 நாட்கள் முதல் 29 நாட்களுக்குள் மெச்சூரிட்டி அடையும் எஃப்டிகளுக்கு ஆண்டுக்கு 3.00 சதவிகிதம் வட்டியைப் பெறுவார்கள். இது தவிர, 30 நாட்கள் முதல் 45 நாட்கள் மற்றும் 46 முதல் 60 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு வங்கி இப்போது 3.25 சதவீத வட்டியை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செலுத்தும்.


ஐசிஐசிஐ வங்கியானது 61 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்குப் பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 3.40 சதவீத வட்டியை வழங்கும். அதேசமயம் 91 முதல் 120 நாட்களில் மெச்சூரிட்டி அடையும் எஃப்டிகளில், வங்கி இப்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 4.25 சதவீத வட்டியை செலுத்தும். இதேபோல், 121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு, பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வங்கி 4.25 சதவீத வட்டியை வழங்கும். 151 முதல் 184 நாட்களில் மெச்சூரிட்டி அடையும் எஃப்டிகளுக்கு மட்டுமே 4.25 சதவீத வட்டி கிடைக்கும்.


185 முதல் 210 நாட்கள் மற்றும் 211 முதல் 270 நாட்கள் வரை நிலையான வைப்புத்தொகைக்கு 4.50 சதவீத வட்டியை வழங்கும். அதேபோல் 271 முதல் 289 வரையிலான எஃப்டிகள் மற்றும் 290 முதல் 1 ஆண்டு வரையிலான எஃப்டிகளுக்கு சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4.70 சதவீத வட்டியை செலுத்தும். 1 வருடம் முதல் 389 நாட்கள் வரை செய்யப்படும் எஃப்டிகளுக்கு 4.95 சதவிகிதம் வட்டி கிடைக்கும். 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான எஃப்டிகளில், சாதாரண வாடிக்கையாளர் மற்றும் மூத்த குடிமகன் 4.95 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.


15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீத வட்டி வழங்கப்படும். 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு ஆண்டுக்கு 5% வட்டியைப் பெறுவார்கள். இரண்டு ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை மற்றும் 3 ஆண்டுகள் ஒரு நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.25 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR