கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 6.35 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகள் சார்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று ஆண்டுகளுக்கான எஃப்.டி.க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் சாதாரண FD-களை விட அதிக வட்டி பெறுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி YES வங்கி தனது FD விகிதங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கின்றது.