SBI வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இனி SMS கட்டணங்கள் இல்லை!
*99# என்ற எண்ணுக்கு டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியானது அடித்தட்டு மக்களிடையே மொபைல் பேங்கிங் வாயிலாக டிரான்ஸாக்ஷன் செய்யும் வசதியினை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய செய்தியினை வழங்கியுள்ளது. அதாவது இனிமேல் எஸ்பிஐ வங்கி மொபைல் மூலம் டிரான்ஸாக்ஷன் செய்யப்படும்போது அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஏழ்மையான மக்களுக்கு நன்மை கிடைப்பதுடன் மொபைல் வழி டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. யூஎஸ்எஸ்டி சேவைகளைப் பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி டிரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் *99# என்ற எண்ணுக்கு டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்போகிராஃபிக் ஒன்றை பகிர்ந்து கொண்டு கூறுகையில், 'மொபைல் வழியாக செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களில் எஸ்எம்எஸ்-க்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது, இப்போது வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளது. யூஎஸ்எஸ்டி என்பது டிரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கும், அக்கவுண்டில் உள்ள இருப்பை சரிபார்ப்பதற்கும், வங்கி ஸ்டேட்மெண்டை உருவாக்குவதற்கும் என வங்கி சேவை பலவற்றிற்கும் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.
மேலும் படிக்க | IRCTC: திருவிழாவுக்கு ஊருக்கு போக ஈஸியா ரயில் டிக்கெட் புக் செய்யலாம்
மேலும் இந்த சேவையினை ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணைய வசதி பெற்றவர்கள் தான் பயன்படுத்த முடியும் என்பது கிடையாது, சாதாரண போன்கள் வைத்திருப்பவர்களும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். *99# என்கிற எண்ணை பயன்படுத்தி மொபைல் பேங்கிங்கைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் பணத்தை டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ளவோ அல்லது உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை சரிபார்க்கவோ அல்லது வங்கி ஸ்டேட்மென்ட் பெறவோ இந்த சேவை உங்களை அனுமதிக்கிறது. மேலும் பணம் அனுப்ப, பணம் பெற, அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட், யூபிஐ பின் மாற்றம் போன்ற எவ்வித சேவைக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தபால் துறையின் வங்கியில் முக்கிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ