இந்த இரண்டு அரசு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால், 4 லட்சம் ரூபாய் வரை பலன் கிடைக்கும்.  பேங்க் ஆப் பரோடாவில் உங்களுக்கு கணக்கு இருந்தால் உங்களுக்கு இந்த சூப்பர் வாய்ப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிக்கையாளர்களுக்கு வங்கி பல சலுகைகளை கொண்டு வந்துள்ளது. வங்கியின் இந்த திட்டம் பலருக்குத் தெரியாது. பணம் சேமிக்க நினைப்பவர்கலுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ .28.5 முதலீடு செய்வதன் மூலம் 4 லட்சம் ரூபாய் வரை முதிர்வுத்தொகை கிடைக்கும். இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்து இந்தப் பலனைப் பெறலாம்.  பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana).


Read Also | Great Indian Festival Sale: கவர்ச்சிகரமான சலுகை - தள்ளுபடிகள் குறித்து விவரம்


இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்ய வேண்டும். (how to do small investment) அதாவது, இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் ஆண்டுக்கு மொத்தம் ரூ .342 முதலீடு செய்ய வேண்டும். இதன் பொருள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மாதம் தோராயமாக 28 ரூபாய் செலுத்தினால் போதும். 
 
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் நன்மைகள்


பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் வருடாந்திர பிரீமியம் 330 ரூபாய் மட்டுமே. (BOB financial help services) இந்த திட்டத்தின் உதவியுடன், உங்களுக்கு ஆயுள் காப்பீடும் கிடைக்கும். மறுபுறம், காப்பீடு எடுத்தவர் இறந்தவர் இறந்தால், அவருடைய குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். வருடாந்திர பிரீமியமான 330 ரூபாய் இந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஈசிஎஸ் (ECS) மூலம் எடுக்கப்படும்.


பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் நன்மைகள்
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா PMSBY திட்டம் மிகக் குறைந்த கட்டணத்தில் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. PMSBY திட்டம் மத்திய அரசின் அற்புதமானத் திட்டம். இந்தத் திட்டத்தில் 12 மட்டுமே டெபாசிட் செய்தால், 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும்.


Read Also | பிக் பில்லியன் டேஸ் விற்பனை: மெகா தள்ளுபடி சலுகைகளை வழக்கும் ஃப்ளிப்கார்ட்


ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் 2 லட்சம் நன்மைகளை இலவசமாகப் பெறுகிறார்கள்.


ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, வங்கி பல வசதிகளைத் தருகிறது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .2 லட்சம் வரை விபத்து காப்பீட்டு வசதியை வழங்குகிறது.


அடல் ஓய்வூதிய திட்டம்
குறைந்த பணத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ், மக்களுக்கு 1000 முதல் 5000 ரூபாய் மாத ஓய்வூதியத்தை அரசாங்கம் உத்தரவாதம் செய்கிறது. இந்த திட்டத்திற்கு 40 வயது வரையிலானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


Also Read | ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR