புதுடெல்லி: இன்றைய தங்கம் விலை - நீங்கள் நகைகளை வாங்க அல்லது செய்ய திட்டமிட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தால், நகைகளை வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. கடந்த ஆண்டு குறைய தொடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய ஆண்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை, பத்து கிராமுக்கு ரூ .10,000 வரை குறைந்துள்ளது. வெள்ளியின் விஷயத்திலும் இதே நிலைமை நீடிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா காலத்தில் (Corona Virus)  முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளனர். இதனால் விலைகள் பெருமளவில் அதிகரித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தங்கம் பத்து கிராமுக்கு 56,191 ரூபாயாக இருந்தது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ.78,000 கிடைத்தது.


ரூ .10000 அளவிற்கு குறைந்துள்ளது
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611  என்ற அளவில் இருந்தது. இதனால், தங்க நகைகளை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கூறப்படுகிறது.


தங்க விலையில் சிறிய மாற்றம்
பிப்ரவரி 9, செவ்வாயன்று, தங்கத்தின் விலையில் மற்றொரு சிறிய மாற்றம் காணப்பட்டது மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .47,559  என்ற அளவை தொட்டது. தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் 10 கிராமுக்கு ரூ .2000 முதல் ரூ .2500 வரை குறைந்துள்ளது.


தங்கத்தின் விலை வீழ்ச்சியடைய எது காரணம்?
பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தங்கக் கடத்தலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என்று அவர் கூறியிருந்தார். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.


ALSO READ | Indian Railway வழங்கும் அசத்தல் சேவை... இனி உங்கள் லக்கேஜை சுமக்கும் வேலை இல்லை..!!!