சென்னை: ரயில் பட்டாசு விதிகள்: தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு செய்திகள் முக்கியத்துவம் பெறுகிறது. பாரம்பரியமாக கொண்டாடினாலும் சரி, நவீன முறையில் கொண்டாடினாலும் தீபாவளி என்பது இந்தியாவில் கொண்டாட்ட மனோபாவத்தை வெளிப்படுத்தும் விதமாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொண்டாட்டத்திற்காக மேற்கொள்ளும் பயணமே, வாழ்க்கையை திசை திருப்பிவிடக்கூடாது. பயணத்தின்போது நீங்கள் செய்யும் சிறிய தவறும் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். தீபாவளியன்று வீட்டில் ஜாலியாக இருக்க நினைத்து மேற்கொள்ளும் பயணமே ஜெயிலில் களி திங்க காரணமாகிவிடக்கூடாது. 


சமூக ஊடகங்களில் 33 வினாடிகள் கொண்ட வைரல் வீடியோவில், ஒரு யூடியூபர் ரயில் தண்டவாள பாதையில் பட்டாசுகளை வெடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் உள்ள இந்த வீடியோ 227/32 ஃபுலேரா-அஜ்மீர் பிரிவில் உள்ள தந்த்ரா நிலையத்திற்கு அருகில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.



ரயில் தண்டவாளத்தில் பட்டாசுகளை எரிப்பது, தண்டவாளத்தை சேதப்படுத்தும் வகையின் கீழ் வருகிறது. வடமேற்கு ரயில்வே அந்த நபர் மீது 145 மற்றும் 147 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த பிரிவுகளின் கீழ், அபராதம் மற்றும் சிறை தண்டனை என இரண்டு வகையிலும் விதிக்கப்படும்.


மேலும் படிக்க | தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை கட்டுப்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு


ரயிலில் பயணிக்கும்போது பட்டாசு எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ரயிலில், ரயில் நிலையங்களில் பட்டாசு வெடித்தாலோ, தண்டவாளத்தில் ரயிலில் பட்டாசு வெடித்தாலும் கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பாக ரயில்வே புதிய எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. பட்டாசு தொடர்பாக ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


ரயில் பட்டாசு விதிகள்
இந்தியா முழுவதும் நாளைய தினம் தீபாவளி கொண்டாட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மக்கள் ரயில்வே மூலம் தங்கள் வீடுகளுக்கு சென்று பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


இந்த வீடியோவில், ஒரு யூடியூபர் ரயில் பாதையில் பட்டாசு வெடிப்பதைக் காணலாம். இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிரடியாக ட்வீட் செய்துள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய ரயில்வேயும் பட்டாசு வெடித்து ரயிலில் பயணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று ட்வீட் செய்துள்ளது.


பட்டாசு கொண்டு சென்றால் அபராதம்
ரயிலில் அல்லது ரயில் பாதையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது, 164வது பிரிவின் கீழ் சிறை மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மத்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு செய்தி பகிர்ந்துள்ளது: 'பயணிகள் கவனத்திற்கு! ரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக யாரும் ரயிலில் பட்டாசுகளுடன் பயணம் செய்யக்கூடாது. அப்படி யாராவது பட்டாசு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், ரயில்வே சட்டம் பிரிவு 164ன் கீழ் கடும் அபராதம் விதிக்கப்படும். பிரிவு 164-ன் கீழ், ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்”. 


தடை செய்யப்பட்ட பொருட்களின் பிரிவில் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ரயிலுக்குள் பட்டாசு வெடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு செய்தால், இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.       


மேலும் படிக்க | அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம்!


ரயில் பயணத்தில் எந்தெந்த பொருட்களை கொண்டு செல்லக்கூடாது?


ரயில் பயணத்தின் போது, ​​அடுப்புகள், கேஸ் சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனம், பட்டாசு, அமிலம், துர்நாற்றம் வீசும் பொருட்கள், தோல் அல்லது ஈரமான தோல், எண்ணெய், கிரீஸ், பொட்டலங்களில் கொண்டு வரப்படும் கிரீஸ் போன்ற பொருட்கள் உடைந்தால் அல்லது கசிந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தும். அது பயணிகளின் பொருட்கள் அல்லது பயணிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம், என்பதால் இவற்றுக்கு எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.


பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. 
தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.


இதனையொட்டி, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை மிகவும் அவசியமானது. ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மனைவிகளை மாற்றி உல்லாசம்! ஈசிஆர் பண்ணை வீட்டில் இரவில் நடந்த கூத்து - பகீர் பின்னணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ