Govt Investment Schemes: இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பொருளாதாரம் சம்மந்தமான விழிப்புணர்வு இருந்து வருகிறது. பல இணையதளங்களும், வல்லுனர்களும் மக்களுக்கு பல்வேறு முதலீட்டு திட்டங்கள் குறித்த அறிவை வழங்கி வருகின்றனர்.  எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும், திட்டத்திற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது போன்ற பல தகவல்களும் இப்போது ஊடகங்களில் கிடைக்கிறது.  முந்தைய தலைமுறையினருக்கு தெரிந்ததை விட, இன்றைய காலகட்டத்தில் உள்ள தலைமுறையினருக்கு முதலீட்டு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு சற்று அதிகமாகவே இருக்கிறது.  அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்கள் நமது பணத்திற்கு பாதுகாப்பையும், சிறப்பான வருமானத்தையும் தருகிறது.  மத்திய அரசு பல வகையான முதலீட்டு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றது.  அந்த திட்டங்களில் நீங்கள் பணத்தை மாதாந்திர, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என உங்களின் வசதிக்கேற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | DA Hike: 3 லட்சம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!


இந்தத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பழைய வரி விதிப்பின்கீழ் வரிவிலக்கின் பலனையும் பெறுகிறார்கள்.  2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 70 bps (அடிப்படை புள்ளிகள்) வரை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கிறது.  இப்போது அரசு வழங்கும் சிறப்பான திட்டங்களின் வட்டி விகிதங்களை பின்வருமாறு காண்போம்.


- மூத்த குடிமக்கள் இப்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மூலம் தங்கள் சேமிப்பின் மீது அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றனர்.  ஏனெனில் வட்டி விகிதம் 8% லிருந்து 8.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


- தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) இப்போது 7% லிருந்து 7.7% அதிகரித்த வட்டி விகிதத்தை வழங்குகிறது.  சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) வட்டி விகிதங்களும் 7.6% லிருந்து 8% ஆக உயர்ந்துள்ளது.


- கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) திட்டமானது, முந்தைய 120 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 115 மாதங்களுக்கு வட்டி விகிதம் 7.2% லிருந்து 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


- தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டமும், அதன் வட்டி விகிதம் 7.1% லிருந்து 7.4% ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.  இதற்கிடையில் பொது வருங்கால வைப்பு நிதி 7.1% வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்குகிறது.


- போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்களும் வட்டி விகிதங்களில் அதிகரிப்பைக் கண்டுள்ளன.  1 ஆண்டு வைப்புத்தொகைக்கு இப்போது 6.8% வட்டி (6.6% வரை), 2 ஆண்டு வைப்புத்தொகைக்கு 6.9% வட்டி (6.8% இலிருந்து) 3 ஆண்டு வைப்புத்தொகைக்கு 7% வட்டி (6.9% வரை), மற்றும் 5 ஆண்டு வைப்புத்தொகைக்கு 7.5% வட்டி (7% வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலே உள்ள அரசின் திட்டங்களில் முதலீடு செய்ய முதியவர்கள் மற்றும் பெண்களை ஊக்குவிப்பதே மத்திய அரசின் முக்கியமான நோக்கமாகும்.  மூத்த குடிமக்களுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தையும், பெண்களுக்கான புதிய சேமிப்புத் திட்டமான மகிளா சம்மன் பச்சத் சான்றிதழ் யோஜனா திட்டத்தையும் செயல்படுத்துகிறது.


மேலும் படிக்க | ரூ.2,000 நோட்டு விவகாரம்: ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ