PPF vs SSY: பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த திட்டம் எது?

பெண்கள் குழந்தைகள் பிறந்தவுடன் சேமிப்பை தொடங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) எது சிறப்பான திட்டம் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 23, 2023, 09:02 PM IST
  • இரண்டு திட்டங்களையும் நீங்கள் வங்கி, தபால் நிலையங்களில் தொடங்கலாம்.
  • 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சிறந்த திட்டமாக SSY உள்ளது.
  • அனைத்து வயதினரும் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
PPF vs SSY: பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த திட்டம் எது? title=

PPF vs SSY: பெண்கள் குழந்தைகள் பிறந்தவுடன் சேமிப்பை தொடங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) எது சிறப்பான திட்டம் என்பதை இதில் காணலாம்.

PPF vs SSY: ஒரு குழந்தை பிறந்தவுடன், இப்போதெல்லாம் பெற்றோர்கள் அந்த குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்னிறைவு அடையச் செய்ய மத்திய அரசு பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய நிதி பெறப்படுகிறது. உங்கள் வீட்டிலும் ஒரு பெண் குழந்தை பிறந்து, அவளுடைய எதிர்காலத்திற்காக நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) இரண்டும் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் வலுவான லாபத்தைப் பெறலாம். 

SSY - PPF எதில் முதலீடு செய்யலாம்?

குறிப்பிடத்தக்க வகையில், செல்வ மகள் சேமிப்பு திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம், 21 வயதுக்குப் பிறகு பெண் குழந்தைக்கு அதிக நிதி கிடைக்கிறது. அதே நேரத்தில், எந்த நபரும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதனுடன், 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு PPF கணக்கையும் திறக்கலாம்.

மேலும் படிக்க | SBI: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வரி விலக்கு - கணக்கை திறப்பது எப்படி?

இரண்டு திட்டங்களின் காலம்? 

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பிறப்பு முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்காக எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் கணக்கை திறக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு 21 ஆண்டுகள் ஆகும். மறுபுறம், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைப் பற்றி பேசினால், அதில் மொத்த முதலீட்டு காலம் 15 ஆண்டுகள்.

பெண் குழந்தைக்கு 18 வயது ஆன பிறகும் திருமணத்திற்கு முன்பே SSY கணக்கை மூடலாம். மறுபுறம், PPF கணக்கைப் பார்த்தால், அதில் முதலீடு செய்யும் காலத்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

இரண்டு திட்டங்களிலும் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மறுபுறம், பொது வருங்கால வைப்பு நிதியைப் பற்றி பேசுகையில், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன், இரண்டு திட்டங்களின் கீழும் நீங்கள் எந்த தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கணக்கைத் திறக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

இரண்டுக்கும் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், 8 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டியானது காலாண்டு அடிப்படையில் கணக்கிற்கு மாற்றப்படும். அதே நேரத்தில், PPF கணக்கில் 7.1 சதவீத வட்டி கிடைக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டமாக இருக்கும். இதனுடன், கணக்கில் திரும்பப் பெறுவது பற்றி பேசினால், குழந்தை 18 வயதுக்குப் பிறகும் 21 ஆண்டுகளுக்குப் பிறகும் SSY கணக்கில் உள்ள பணத்தை ஓரளவு திரும்பப் பெறலாம். அதே PPF கணக்கில் முதலீடு செய்த ஏழாவது ஆண்டுக்குப் பிறகு பகுதியளவு திரும்பப் பெறலாம்.

மேலும் படிக்க | சதாப்தி / இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பதிலாக வந்தே பாரத்... ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News