பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?
SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது... சிறுகக் கட்டி பெருக வாழ்...
பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது மட்டுமல்ல, அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக பெருக்கலாம். திட்டமிட்டு சேமித்தால், நீண்ட காலத்தில் பணக்காரராக அதிக முதலீடு தேவையில்லை. பணத்தை சேமிக்க பல வழிகள் இருந்தாலும், சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மெண்ட் என்ற சுலபமான முதலீட்டு முறை, சுலபமாக உங்கள் பணத்தை பன்மடங்காக பெருக்குகிறது.
பொருளாதார ரீதியாக வலுப்படுத்தவும், வயதான பிறகு வாழ்வின் தரநிலையை மேம்படுத்தவும், உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். அது எஸ்.ஐ.பி எனப்பதும் சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மெண்ட்டாக இருந்தால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
அதிலும், பரஸ்பர நிதியத்தில் முதலீட்டை பன்மடங்காக பெருக்கிக் கொள்ளலாம்.
எதிர்காலத்திற்கான சேமிப்பை உருவாவாக்க உதவும் SIPகள் மூலம் சேமித்தால், உங்கள் எதிர்காலத்திற்காக படிப்படியாக ஒரு கணிசமானத் தொகையை உருவாக்கலாம்.
SIPயில் சேமிப்பது எப்படி?
முதலீடு செய்வதற்கான ஒரு முறையான அணுகுமுறையான SIPகளில் செய்யும் சிறிய தொகையும், நீண்ட கால இடைவெளியில் நல்ல வருமானத்தைத் தரும். இதற்கு மாதாமாதம் ஒரு சிறியத் தொகையை ஒதுக்கினால் போதும்.
SIPயில் முதலீடு செய்வதன் மூலம், பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்தை பெறலாம், ஆனால் ரிஸ்கே இல்லாமல் நீங்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் ஏற்படும் தனிமனித ஆபத்து, எஸ்.ஐ.ப்பியில் குறைந்துவிடுகிறது. ஏனெனில் சந்தை ஆபத்தை சிறப்பாக நிர்வகிக்கும் சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மெண்ட், உங்களை பங்குச்சந்தையில் பங்கேற்கவும் அனுமதிக்கிறது.
SIPகள் வேலை செய்யும் விதம்
SIPகள் ரூபாய் செலவு சராசரி அடிப்படையில் இயங்குகிறது. இது வழக்கமான முதலீடு, சராசரி கொள்முதல் செலவு நீண்ட காலத்திற்கு சமமாக இருப்பதை உறுதி செய்கிறது.
சந்தைகள் உயரும்போது, உங்கள் முதலீட்டிற்கு குறைவான யூனிட்கள் கிடைக்கும். சந்தைகள் வீழ்ச்சியடையும் போது, உங்கள் முதலீட்டிற்கு அதிக பங்குகள் கிடைக்கும். இது உங்கள் அபாயத்தைக் குறைப்பதுடன், குறைந்த சராசரி செலவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உறுதி செய்கிறது.
நீண்டகால சேமிப்பு
நீண்ட காலத்திற்கு ஒரு சிறிய தொகையை தொடர்ந்து சேமித்து வருவது என்பது, முதலீட்டின் மீது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
SIP இல் முதலீடு செய்வதால் என்ன நன்மை?
நிதி மேலாண்மை: SIP களில் முதலீடு செய்வது என்பது, நிதி மேலாண்மையை காட்டுகிறது. கட்டாய சேமிப்பை ஊக்குவிக்கும் எஸ்.ஐ.பிகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் குடும்பத்திற்காக பெரிய சேமிப்பு நிதியத்தை உருவாக்க உதவுகிறது.
முதலீட்டில் நெகிழ்வுத்தன்மை: முதலீட்டில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் SIP கள், முதலீட்டின் (Investment Tips) அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் உதவுகின்றன.
வசதி: தொந்தரவு இல்லாத முதலீடு என்றால், அது SIP என்றே சொல்லலாம். எளிய வழிமுறைகள் மூலம் ஆன்லைனில் எளிதாக இந்த முதலீட்டை செய்யலாம். உங்கள் திட்டமிட்ட SIP சேமிப்பு, கணிசமான சேமிப்பை உருவாக்கும்.
ஆபத்து குறைவு: ஒட்டுமொத்தமாக செய்யும் முதலீடுகள் அதிக மூலதன அபாயத்திற்கு ஆளாக்கலாம். ஆனால், SIP உங்கள் முதலீட்டை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதிகரிக்கச் செய்கிறது. மேலும், மூலதனத்திற்கான ஆபத்தை குறைக்கிறது என்பதுடன், நீண்டகால அடிப்படையில் லாபம் கணிசமாக இருக்கும்.
மேலும் படிக்க | PVC ஆதார் அட்டை 5 நட்களில் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் முறை..!!
(முக்கிய குறிப்பு - பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ