HDFC வங்கி FD விகிதங்கள்: HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 2 கோடி வரையிலான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை திருத்திய ஹெச்டிஎஃப்சி வங்கி அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய விகிதங்கள் நேற்று (ஜூன் 10, 2024) முதல் அமலுக்கு வந்துவிட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள் இனிமேல் தங்கள் நிலையான வைப்புத் தொகைக்குக் 7.75 சதவீதம் வரை வட்டி பெறலாம். 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.20 சதவீதம் அதிகரித்துள்ளது.


திருத்தப்பட்ட விகிதங்களின் படி எத்தனை நாட்கள் டெபாசிட்டுக்கு எவ்வளவு வட்டி என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்


ஹெச்டிஎஃப்சியின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 


7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை - 3.00%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.50%
46 நாட்கள் முதல் 6 மாதங்களுக்குட்பட்ட டெபாசிட் - 4.50%
6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை - 5.75%
9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான டெபாசிட் - 6.00%
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான  டெபாசிட் - 6.60%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை - 7.10%
18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை - 7.25%
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை - 7.00%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை - 7.15%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை - 7.20%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை - 7.00%


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு


மேற்கண்ட பட்டியலில் காணப்படும் வட்டி விகிதங்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானவை. இந்த வட்டி விகிதங்களுடன் மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படும். அதாவது, மூத்த குடிமக்களுக்கு அனைத்து விதமான காலவரையறையிலும் 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். உதாரணமாக18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு செய்யப்பட்ட FD களில் சாதாரணமக்களுக்கு 7.25% வட்டி என்றால், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.


யூனியன் வங்கி FD விகிதங்கள் உயர்வு
அண்மையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா FD மீதான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான எஃப்டிகளுக்கு பொருந்தும் இந்த திருத்தங்கள், ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வந்தன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா FDக்கு 3.5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது.


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 3.5 சதவீத வட்டியை வழங்குகிறது. அதேசமயம் 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FDக்கு 4.5 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. நீங்கள் 91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு FD செய்தால், உங்களுக்கு 4.8 சதவிகித வட்டி கிடைக்கும். 181 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான FDக்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கும்.


1 வருடம் முதல் 398 நாட்கள் வரையிலான FDகளுக்கு 6.75 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. அதே நேரத்தில், வங்கி 399 நாட்களுக்கு FD க்கு அதிகபட்சமாக 7.25 சதவிகிதம் வட்டி அளிக்கிறது. 400 நாட்கள் முதல் 998 நாட்கள் வரை FD செய்பவர்களுக்கு 6.50 சதவீத வட்டி கிடைக்கும். 999 நாட்களுக்கு FDக்கு 6.40 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், 1000 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDக்கு 6.50 சதவீத வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ