இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்கும் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, ஒரு வாரத்திற்குள் அதன் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை இரண்டாவது தடவையாக அதிகரித்துள்ளது.  ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்த எஃப்டி விகித உயர்வு, ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும்.  முன்னர் உயர்த்தப்பட்ட ஹெச்டிஎஃப்சியின் எஃப்டி-க்கான வட்டி விகிதங்கள் நடைமுறையில் இருப்பதாக வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மூத்த குடிமக்களின் எஃப்டி கணக்குகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, இனி அதிக லாபம் பெறலாம்


ஜூன் 17 முதல் வங்கியின் புதிய வட்டி விகித உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  இந்த உயர்வுக்குப் பிறகு வங்கியின் எஃப்டி விகிதங்கள் 2.50 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாக 7 முதல் 29 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு அதிகரித்துள்ளன.  30 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் 3 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு, வட்டி விகிதங்கள் 3.25 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளன.  மற்ற தவணைகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளும் 10 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்கள் / ஓய்வுபெற்ற பணியாளர்கள், குடியுரிமை பெற்ற இந்தியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். சிறப்பு விகிதங்கள் குடியுரிமை டெபாசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்" என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.  மேலும் இது உள்நாட்டு / என்ஆர்ஓ / என்ஆர்இ கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியுள்ளது.  தற்போது வங்கியின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து இங்கே காண்போம்.


- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை,  பொது மக்களுக்கு - 2.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்.


- 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை,  பொது மக்களுக்கு - 2.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்.


- 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை,  பொது மக்களுக்கு - 3.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்.


- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை,  பொது மக்களுக்கு - 3.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்.


- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை,  பொது மக்களுக்கு - 3.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்.


- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை, பொது மக்களுக்கு - 3.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.25 சதவீதம்.


- 6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை,  பொது மக்களுக்கு - 4.65 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.15 சதவீதம்.


- 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை, பொது மக்களுக்கு - 4.65 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.15 சதவீதம்.


- 1 ஆண்டு, பொது மக்களுக்கு - 5.35 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்.


- 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை, பொது மக்களுக்கு - 5.35 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்.


- 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை,  பொது மக்களுக்கு - 5.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்.


- 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை, பொது மக்களுக்கு - 5.70 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.20 சதவீதம்.


- 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை, பொது மக்களுக்கு - 5.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் செய்திகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR