7வது ஊதியக்குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் டிரிபிள் போனான்சா கிடைக்கக்கூடும். ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் 3 பெரிய செய்திகளைப் பெறக்கூடும்.
அகவிலைப்படி உயர்வு, 18 மாத டிஏ நிலுவைத் தொகை பற்றிய அறிவிப்பு, வருங்கால வைப்புத்தொகை மீதான வட்டி ஆகியவை இந்த முக்கிய மூன்று அறிவிப்புகளாகும்.
ஜூலையில் 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்
சமீபத்திய அனைத்திந்திய சிபிஐ-ஐடபிள்யு தரவு, ஜூலை மாதத்தில் நல்ல அகவிலைப்படி அதிகரிப்பு இருப்பதற்கான நம்பிக்கையை மீண்டும் அதிகப்படுத்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் சமீபத்திய அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ தரவு காரணமாக அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஏப்ரல் மாத ஏஐசிபி இன்டெக்ஸ், டிஏவை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது. அடுத்த மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல டிஏ அதிகரிப்பு இருக்கும் என ஊடகங்களில் ஊகங்கள் உள்ளன.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு!
ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு இன்னும் சில நல்ல செய்திகளை அளிக்கக்கூடும். சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, ஜூலை மாதத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி ஐந்து சதவிகிதம் உயர்த்தப்படலாம். அதாவது மொத்த டிஎ 39 சதவீதத்தை எட்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினும் ஏப்ரல் மாத ஏஐசிபிஐ குறியீடு சற்று அதிக சதவீத உயர்வைக் குறிக்கிறது.
18 மாதங்கள் நிலுவையில் உள்ள அகவிலைப்படி அரியர் தொகை
நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்த அறிக்கைகள் மீண்டும் ஒருமுறை பரவி வருகின்றன. புதிய அறிக்கைகளின்படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எடுக்கப்படலாம். இந்த அரியர் தொகை அளிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் ஒரே முறையில் சுமார் இரண்டு லட்சம் ரூபாயை அரியர் தொகையாகப் பெறுவார்கள். அகவிலைப்படி தொகையானது ஊழியர்களின் ஊதியம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.
வருங்கால வைப்பு நிதி வட்டித்தொகை
2021-22 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் 8.10% இபிஎஃப் வருடாந்திர வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அறங்காவலர் குழு, இபிஎஃப் பரிந்துரைத்துள்ளது. வட்டி விகிதம் அரசாங்க அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இபிஎஃப்ஓ விரைவில் அதன் சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கும். இபிஎஃப்ஓ ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் வட்டி விகிதத்தை அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR