கொரோனா ஊரடங்கால் ஏராளமான தொழில்கள் முடங்கின. அதிலும், சிறிய அளவில் தொழில் நடத்துபவர்களின் நிலை பரிதாபம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னும் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ளது. இந்த சூழ்நிலையில் சிறு கடை நடத்துபவர்கள், சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பலர் உடனடி தேவைக்கு நகைகளை அடகு வைத்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!! 


 பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் பலர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் கடந்த ஜனவரியில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் சுமார் 1,450 டாலராக இருந்தது. இது தற்போது கிடுகிடுவென அதிகரித்து ஒரு டிராய் அவுன்ஸ் 1,800 டாலரை தாண்டி விட்டது. கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மட்டுமின்றி, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப்போர் முடிவுக்கு வராததும் இதற்கு முக்கிய காரணம்.


இதற்கேற்ப, இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நகை விலை அதிகரித்ததால், பணத்தேவைக்கு மக்கள் பழைய நகைகளை விற்பது மற்றும் அடகு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல், தொழில் துறையினரும் தொழிலை விரிவுபடுத்த தங்கள் மூலதன தேவைக்காக நகைக்கடன் வாங்க தொடங்கி விட்டனர். இதனால், நகைக்கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் வழங்கல் அதிகரித்து வருகிறது.


ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!


இது குறித்து, முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் கூறுகையில்,‘‘கொரானா பரவல் இருந்தாலும் முத்தூட் பைனான்சின் வர்த்தகம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. சிறிய கடைக்காரர்கள், சிறு தொழில் செய்வோர் தங்கள் மூலதன தேவைக்காக நகைக்கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. ஏப்ரலில் சற்று மந்த நிலை காணப்பட்டது. ஆனால்,கடந்த மே மாதத்தில் ஊரடங்கு தளர்வுகள் வந்த பிறகு, தங்க நகைக்கடன் தேவை அதிகரித்துள்ளது. அதிகமான மக்கள், சிறு கடைக்காரர்கள் பலர் நகைக்கடன் வாங்குகின்றனர். பொருட்களை வாங்கி இருப்பு வைக்கவும், கடன்களை அடைக்கவும், மூலதன செலவுகளுக்காகவும் உடனடி பணத்தேவையை இது பூர்த்தி செய்கிறது.


 வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் நகைக்கடன் வழங்கி வருகிறோம். இதற்காக மொபைல் ஆப்ஸ்சும் உள்ளது. இதன் மூலம் நகைக்கடன் வழங்குவது, கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ₹224 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் எங்கள் நிறுவனத்தின் நகைக்கடன் வர்த்தகம் 15 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.