வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று கேட்டால், ‘சொந்த வீடு வாங்க வேண்டும்’ என்பது பலரின் பதிலாக இருக்கும். உணவு உடை இருப்பிடம் என மனிதர்களின் அடிப்படை தேவைகளில் மூன்றாவதாக இடம் பெறும் இருப்பிடம் என்னும் சொந்த வீட்டுக் கனவை பூர்த்தி செய்ய வறுமைக்கோட்டில் இருப்பவர்களுக்கு தேவைப்படும் தொகையும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் தேவைப்படும் தொகையும் வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால், வீடு வாங்கும் லட்சியத்தில் மாற்றம் இருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடு வாங்குபவர்களின் பெரும்பாலானவர்களுக்கு கடன் வாங்கித் தான் வீடு கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது.. வீட்டுக் கடன் என்பது வாங்கும்போது பெரிய அளவில் தெரியாது. நீண்ட கால அடிப்படையில் அதனை திருப்பிச் செலுத்துபோது சுமை அதிகமாகத் தெரியும். அதிலும், பொதுவாக நாம் வாங்கிய கடன் தொகையை விட அதாவது அசலை விட வட்டி அதிகமாக செலுத்த வேண்டியிருப்பது பலருக்கும் கவலையைத் தரும்.


எனவே வீட்டுக்கடன் என்பது நமது கனவை நிறைவேற்ற கிடைக்கும் உதவி என்பது, சுமையாக தோன்றாமல் இருக்க முக்கியமான விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு


வீட்டுக் கடன் காலம்
வீட்டுக் கடனை எத்தனை ஆண்டுகளுக்கு வாங்குகிறோம் என்பது நமக்கு சுமையா என்பதை தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும். கடன் காலத்தை அதிக ஆண்டுகள் வைத்திருந்தால், நாம் செலுத்தும் வட்டியும் அதிகமாகவே இருக்கும். ஆனால், கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை குறைவாக வைத்திருந்தால், மாதாந்திர தாணைத்தொகை என்பது அதிகமாக இருக்கும்.


ஒரு உதாரணத்தின் மூலம் இதனை நன்றாக புரிந்துக் கொள்வோம். 15 ஆண்டுகளுக்கான வீட்டுக் கடனுக்கு 9 சதவீத வட்டி என்றும், 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியதாகவும் வைத்துக் கொண்டால், 41 லட்ச ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் கடன் காலம் இருபது ஆண்டு காலமாக இருந்தால் வட்டி மட்டும் 58 லட்சம் ரூபாயாக இருக்கும்.


மாதாந்திர தவணைத் தொகை EMI 
ஒருவர் வீட்டுக் கடன் வாங்கும்போது இருக்கும் நிதி நிலைமை, சில ஆண்டுகளில் மாறிவிடும். அப்போது வேறு செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வீட்டுக் கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்துவது சுமையை குறைக்கும். உதாரணமாக 20 வருடங்களுக்கு வாங்கிய வீட்டுக்கடனுக்கான மாதாந்திர இ.எம்.ஐ தொகையில் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வீதம் அதிகரித்துக் கொண்டே இருந்தால், வீட்டுக் கடனை 10 ஆண்டுகளில் முடித்துவிடலாம்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்


கூட்டு வீட்டுக் கடன்  
வீடு வாங்கும்போது தனியாக ஒருவரின் பெயரில் வாங்காமல், இருவரின் பெயரில் கூட்டாக வாங்குவது நல்லது. ஏனென்றால் கூட்டு வீட்டுக் கடனில், கடன் வாங்கிய இருவரும் வீட்டுக் கடனில் வரிச் சலுகைகளைப் பெறலாம். இது, வருமான வரிச் சலுகையை அதிகமாக பெற உதவும். அசல் தொகையில், இருவரும் தலா ரூ. 1.5 லட்சம் என்ற வீதத்தில் மொத்தம் ரூ. 3 லட்சத்தை 80சியின் கீழ் வரிச்சலுகையாகப் பெறலாம். பிரிவு 24ன் கீழ் இருவரும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம். அதாவது, ஒட்டுமொத்தமாக ரூ.7 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம். வட்டி விகிதங்கள் அதிகரித்தால் வீட்டுக் கடனை மறுசீரமைக்கவும்


வட்டி விகித மாற்றியமைப்பு வாடிக்கையாளர்கள் அதிக EMI மூலம் சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. பொதுவாகவே வீட்டுக்கடன் நீண்ட காலத்திற்கு வாங்குவது. வங்கிகள், அவ்வப்போது வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும். இதை கவனித்து வருவது அவசியம். ஏனென்றால், நீங்கள் 9 சதவிகிதத்திற்கு வாங்கிய கடனின் வட்டி மூன்று வருடங்களுக்கு பின் மாறலாம். மாறிய வட்டி விகிதம் அதிகமானால், செலுத்த வேண்டிய வட்டியும், தவணைக்காலமும் அதிகரிக்கும். இறுதியில் தவணைக்காலம் அதிகரித்தது தெரியும்போது வங்கியுடன் மோதல் போக்கு ஏற்படும்.


எனவே வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் உங்கள் வீட்டுக் கடனின் காலம் அதிகரிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் வங்கியுடன் பேசி உங்கள் வீட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும். வங்கிக் காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்றால், புதிய வட்டி விகிதத்தின்படி EMI ஐ அதிகரிக்கச் சொல்ல வேண்டும்.


மேலும் படிக்க | 7.75% வரை வட்டி தரும் HDFC வங்கி! எந்தத் தொகைக்கு எவ்வளவு வட்டி உயர்ந்தது? லேட்டஸ்ட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ