செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி பொருளாதார ரீதியாக நமக்கு நல்லது. ஆனால் அதன் தொடர்ச்சியான வளர்ச்சி வேலைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. ஆசிரியர்கள், நீதிபதிகள், பள்ளி உளவியலாளர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டர்களின் வேலைகள் உட்பட ஒன்றல்ல இரண்டல்ல, 20 தொழில்கள் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 10 AI செயலிகளின் மொழி மாடலிங் செய்த ஆராய்ச்சிக் குழு, வரும் காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய, 52 மனித திறன்களுடன் அவற்றை இணைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ChatGPT அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, உலகம் முழுவதும் வேலைகளை இழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. ChatGPT ஆனது மின்னஞ்சல்களை எழுதுதல், விண்ணப்பங்களை அனுப்புதல் போன்ற வேலைகளை மனிதர்களை விட சிறப்பாகச் செய்யக்கூடியது. வரும் காலங்களில், இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பெரிய நெருக்கடியாக மாறும்.


மொழி மாடலிங் மேம்படுத்துவது AI திறனை அதிகரிக்கும்


ஆராய்ச்சியின் படி, மொழி மாடலிங் மூலம் AI-ன் திறனை மேலும் அதிகரிக்க முடியும். ஏனெனில் அது நம் மொழியைப் புரிந்துகொள்ளும்போது அல்லது நம் மொழியில் நமக்கு விளக்கும்போது மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் OpenAI-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதில் வெற்றிகரமான ஒரு எடுத்துக்காட்டு. 2021-ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் எட்வர்ட் ஃபெல்டன் உருவாக்கிய AI தொழில்சார் வெளிப்பாடு அளவீட்டையும் ஆராய்ச்சி குழு பயன்படுத்தியது. இதில் நிகழ்நேர வீடியோ கேம்கள், பட உருவாக்கம், வாசிப்புப் புரிதல், மொழி மாடலிங், மொழிபெயர்ப்பு போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. 


இதற்குப் பிறகு, 52 மனித திறன்களும் இதில் சேர்க்கப்பட்டன. யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் லேபர் வெளியிட்ட தொழில்சார் தகவல் வலையமைப்பிலிருந்து மனித திறன்களை ஆராய்ச்சி குழு எடுத்தது. இவை 800-க்கும் மேற்பட்ட தொழில்களில் பயன்படுத்தப்படும் மனித திறன்கள். அவற்றைப் பகுப்பாய்வு செய்த பிறகு, AI-ன் தொடர்ச்சியான வளர்ச்சி குறிப்பாக 20-க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பது தெளிவாகியது.


மேலும் படிக்க | CHATGPT: AI சாட்போட்கள் இந்த வேலைகளை காலி செய்யும்; முதன்முறையாக ஒப்புக்கொண்ட சாம் ஆல்ட்மேன்


எந்தெந்த வேலைகளுக்கு ஆபத்து 


மரபியல் ஆலோசகர்கள், நிதி ஆய்வாளர்கள், டெலிமார்கெட்டர்கள், கொள்முதல் முகவர்கள், பட்ஜெட் ஆய்வாளர்கள், நீதிபதிகள், எழுத்தர்கள், கணக்காளர்கள் & தணிக்கையாளர்கள், கணிதவியலாளர்கள், நீதித்துறை சட்ட எழுத்தர்கள், கல்வி நிர்வாகிகள், மருத்துவ ஆலோசனை வழங்குபவர்கள், ஆசிரியர், ஆய்வாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர், மேலாண்மை ஆய்வாளர், மத்தியஸ்தர்கள் உள்ளிட்ட வேலைகளை சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களால் செய்ய முடியும்.


ஆசிரியர்களுக்கு அதிக ஆபத்து


AI-ன் மொழி மாடலிங்கில் இருந்து வெளிவந்த ஒரு விஷயம் என்னவென்றால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆசிரியர் பணிகளுக்கே இருக்கிறது. ChatGPT அல்லது பிற AI பயன்பாடுகள் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் திறன் கொண்டவை என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. குறிப்பாக ChatGpt மனித மொழியைப் புரிந்துகொள்வதற்கும், இணையத்திலிருந்து எந்த உரையையும் எடுப்பதற்கும், மனிதர்களுடன் பேசுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


CHAT GPT வழங்கும் சிறந்த பதில்


AI சிறந்த தொழில்முனைவோர் திட்டத்தை நடத்தும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கெவின் பிரையன், Chat GPTயின் திறனைச் சோதித்த பிறகு தன்னைத்தானே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகக் கூறுகிறார். அதன் தகவல் வரம்பற்றது மற்றும் எந்த MBA தேர்ச்சி பெற்ற நபரையும் விட இது சிறப்பாக பதிலளிக்க முடியும். இவற்றின் முதல் ஆபத்து டெலிமார்க்கெட்டர்களுக்கு தான், ஏனென்றால் ஏற்கனவே பல நிறுவனங்கள் உரையாடலுக்கான சாட்போட்களை நிறுவியுள்ளன.


நீதிபதியை மாற்றும் வாய்ப்பு?


AI மனித நீதிபதியை நேரடியாக மாற்ற முடியாது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்தது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை நீதிமன்ற அறையில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். குறிப்பாக எந்த புத்தகத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் ஆராய்ச்சி செய்து சொல்ல முடியும். இதன் காரணமாக நீதிபதி கையேடு புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மாத தொடக்கத்தில், கொலம்பிய நீதிபதி ஒருவர் வழக்கை தீர்ப்பதற்கு chatGPT-யை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை வெளிப்படுத்தினார். இதேபோல், கரீபியன் நகரத்தின் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மானுவலும் ஜனவரி 30 அன்று அறிவிக்கப்பட்ட முடிவில் இந்த AI நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்


மேலும் படிக்க | AI தொழில்நுட்பங்களை கண்காணிக்க வேண்டும் - எலான் மஸ்க் எச்சரிக்கை..! பின்னணி இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ