அரிதான நோய்களுக்கான மருந்துகள்: எட்டு அரிதான நோய்களுக்கான மருந்துகளை இந்திய அரசு தயாரித்து வருகிறது. அதில் நான்கு மருந்துகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. மீதமுள்ள நான்கு மருந்துகள் ஒழுங்குமுறைபடுத்தும் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த சில மாதங்களில் இவையும் சந்தையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் ஏழு சதவீத மக்கள் சில அரிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000 அல்லது அதற்கும் குறைவானவர்களில் ஒருவருக்கு ஏற்படும் நோய் அரிதான நோயாகக் கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட அரிய நோய்கள் உள்ளன. நம் நாட்டில், 8.4 முதல் 10 கோடி நோயாளிகளுக்கு சில அரிய நோய்கள் உள்ளன. 80 சதவீத நோய்களுக்கான காரணங்கள் மரபணு சார்ந்தவைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சையை கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் இப்போது 13 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.


இந்த முக்கியமான நடவடிக்கையின் மூலம் இந்தியர்களுக்கு நல்லது என்றால், வியாபார நோக்கிலும் இந்தியாவிற்கு நல்ல லாபம் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கிறது. அரிய வகை நோய்களுக்கான இந்த மருந்துகளை தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா விற்று லாபம் பார்க்கலாம், அதிலும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்தாலே நல்ல லாபம் கிடைக்கும்.   


இந்திய அரசு எட்டு அரிதான நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து வரும் நிலையில், அதில் நான்கு மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன.மீதமுள்ள நான்கு மருந்துகளும், வழக்கமான ஒழுங்குமுறை செயல்பாடுகளை முடிந்த பிறகு, இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும்.


மேலும் படிக்க | சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம்


இந்த மருந்துகளில் கௌச்சர் நோய் (Gaucher) முதல் ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) வரையிலான நோய்கள் அடங்கும். கௌச்சரின் நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்துமே வெளிநாட்டில் இருந்து வருவதால், இந்த சிகிச்சைக்கான மருந்து செலவு ஆண்டுக்கு ரூ.3.5 கோடி என்ற அளவில் ஆகிறது.


இந்த சிகிச்சைக்கான மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்பதால், தற்போது ஆண்டுக்கு 3 முதல் 6 லட்ச ரூபாய் மட்டுமே மருந்து செலவு ஆகும் என்னும்போது, இந்திய அரசின் மருந்து தயாரிப்பு தொழிலின் முக்கியத்துவம் புரியும். இந்திய அரசு எடுத்துள்ள முயற்சிகள், மருந்து விலையில் நேரடியாக 60 மடங்கு விலைகுறைப்பு ஏற்பட உதவி புரிந்துள்ளது.


எஸ்எம்ஏ நோய்க்கான ஊசி 16 கோடி ரூபாய்
SMA நோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஜெனடிக் தெரபி சோல்ஜென்ஸ்மா (Zolgensma) என்ற ஊசி மருந்துக்கு ரூ.16 கோடி செலவாகும். இந்த மருந்தையும் இந்தியாவில் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. டைரோசினீமியா என்பது பிறப்பால் ஏற்படும் ஒரு தீவிர கல்லீரல் நோயாகும்.


மேலும் படிக்க | பாலை விட அதிகம் கால்சியம் உள்ள ‘சூப்பர்’ உணவுகள்!


இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் nitisinone மருந்து முன்பு ஸ்வீடனில் இருந்து வந்தது.  2 mg மருந்தின் விலை 5 லட்சம் என்று இருந்துவந்த நிலையில், அதே மருந்து இனி இந்தியாவில் ஜெனரிக் மருந்தாக ரூ.6 ஆயிரத்திற்கும், பிராண்டட் மருந்தாக ரூ.16 ஆயிரத்திற்கும் கிடைக்கும்.


ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சிரப் ரூ.405க்கு கிடைக்கும் 
 
டைரோசினீமியா சிகிச்சைக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை செலவாகும். இப்போது இந்த மருந்து இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ள விலை நிலையில் அதன் விலை ரூ.2.5 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது மருந்தின் விலை  நேரடியாக 100 மடங்கு குறைந்துள்ளது.


அரிவாள் செல் இரத்த சோகை (Sickle cell anemia) நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்து 100 மில்லி ஹைட்ராக்ஸியூரியா சிரப் ரூ.70 ஆயிரத்திற்கு வாங்கப்படுகிறது. இப்போது இந்த சிரப்பை இந்தியாவில் தயாரிப்பதால், ரூ.405க்கு கிடைக்கும். ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த சிரப்பை கொடுக்க வேண்டியது அவசியம்.


மேலும் படிக்க | ஓவரா ஏறும் எடையை உடனே குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ