Cash Limit At Home: நம் நாடு டிஜிட்டல் மயமாகி வருகின்றது. நாட்டில் டிஜிட்டல் பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பண பரிவர்த்தனைகளிலும் டிஜிட்டல் மாற்றம் மூலம் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், வெளி இடங்களுக்கு செல்லும் போது மக்கள் ரொக்கமாக அதிக அளவில் பணத்தை எடுத்துச் செல்லும் போக்கு குறைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே போல் வீட்டில் அதிக அளவில் பணத்தை வைத்திருக்கும் பழக்கமும் குறைந்துள்ளது. பெரும்பாலான வேலைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இருப்பினும், இன்னும் பலர் ஏடிஎம் அல்லது வங்கியில் இருந்து பணத்தை எடுத்து பெரிய அளவில் ரொக்க பரிவர்த்தனை செய்கிறார்கள். இது தவறு அல்ல. ஆனால், இதன் அளவு அதிகமானால் நாம் சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு பணத்தை ரொக்கமாக வைத்திருகலாம் தெரியுமா? இதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை (Income Tax Department) சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கலாம். மேலும், சில சந்தர்பங்களில் இதற்காக சிறை செல்லவும் நேரிடலாம். வருமான வரித்துறையின் விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.


சிறை, கடுமையான அபராதம்


வீட்டில் பணம் வைப்பதற்கு வருமான வரித்துறை எந்த வரம்பும் விதிக்கவில்லை. வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு பரிவர்த்தனை செய்யலாம். ஆனால் இதில் சிறிய தவறு ஏற்பட்டால் கூட நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இந்த தவறுகள் காரணமாக வருமான வரித் துறை அதிகாரிகள் மூலம் கைது செய்யப்படவோ, அல்லது கடுமையான அபராதம் (Penalty) விதிக்கப்படவோ வாய்ப்புள்ளது. 


வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்?


அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணம் மீட்கப்பட்டதாகவும் நாம் அவ்வப்போது செய்திகளில் காண்கிறோம். இப்படி பிடிபடும் பணம் அங்கீகரிக்கப்படாத பணமாகும். இந்த பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்கிறார்கள். இதனுடன் பணத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்படுகிறார். மொத்தத்தில், பணம் எங்கிருந்து வந்தது என்ற தகவலோ அல்லது வருமான ஆதாரமோ இல்லாதபோது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பணம் வைத்திருப்பவர்கள் வருமான ஆதாரம் பற்றிய தகவல்களை வைத்திருப்பது அவசியம்.


மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் பேங்க் வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் லிஸ்ட் இதோ


அதிக பணம் எடுத்தால் பான் கார்டு கொடுக்க வேண்டும்


மத்திய நேரடி வரி வாரியம் (Central Board Direct Tax) அதாவது சிபிடிடி (CBDT)-இன் விதிகளின்படி, ஒருவர் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை வங்கியிலிருந்து எடுத்தால், அவர் தனது பான் கார்டை காட்ட வேண்டும். ஒரு வருடத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கலாம். மறுபுறம், நீங்கள் ஒரே நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை டெபாசிட் செய்தால், பான் மற்றும் ஆதாரைக் காட்ட வேண்டும். 


ஒருவர் சட்டவிரோதமான வழியில் பணம் சம்பாதிக்கவில்லை என்றால், பீதி அடையத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை வீட்டில் வைத்திருந்தால், அந்த வருமான ஆதாரம் பற்றிய தகவல் உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த சிக்கலும் ஏற்படாது.


மேலும் படிக்க | சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் RC ரத்து! ரூ.25,000 அபராதம் ஜூன் முதல் கடுமையாகும் போக்குவரத்து விதிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ