வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!

Tax Saving Ideas For Women: இந்த காலத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்க, பணிபுரியும் பெண்களுக்கான முக்கியமான ஒரு பதிவாக இது இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2024, 11:00 AM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி.
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ்.
  • செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!! title=

Tax Saving Ideas For Women: வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் வரியை சேமிக்க பல வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள். இந்த காலத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்க, பணிபுரியும் பெண்களுக்கான முக்கியமான ஒரு பதிவாக இது இருக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களில் முதலீடு செய்து பெண்கள் வரியை சேமிக்கலாம். 

பணத்தை பல்வேறு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதுதான் வரிச் சேமிப்புக்கான சிறந்த வழி என்பது பெரும்பாலான சம்பள வர்க்கத்தினருக்குத் தெரியும். ஆனால் அதற்கு எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பற்றிய அடிப்படை புரிதல் தேவை.நிதியாண்டின் முதல் காலாண்டு நடப்பதால், இப்போதே முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது. இது உங்கள் வரியைச் சேமிப்பது மட்டுமின்றி நிதி உதவியையும் அளிக்கும். நல்ல வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வரியைச் சேமிக்கவும் உதவும் பல்வேறு திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டங்கள் நாட்டில் உள்ள பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் சில என்பது குறிப்பிடத்தக்கது. 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)

பிபிஎஃப் என்பது எதிர்கால நிதி பாதுகாப்பிற்கான திட்டமாகும். ஆகையால் வரியைச் சேமிப்பதற்கான வழியைத் தேடுபவர்களுக்கு பிபிஎஃப் ஒரு சிறந்த வழி. PPF இல் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கின் (Tax Exemption) பலனைப் பெறுவீர்கள். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு PPF ஏற்றது. இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF -இல் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகளுடன் காலப்போக்கில் கணிசமான செல்வத்தைக் குவிப்பதற்கான பாதுகாப்பான வழியை இது வழங்குகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate)

வரியைச் சேமிக்க இரண்டாவது சிறந்த முதலீடு NSC. இது 1989 இல் தொடங்கப்பட்ட நீண்டகால நம்பகமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். வரியை சேமிக்க நீங்கள் தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) முதலீடு செய்யலாம். இது அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டமாகும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும். இது ஒரு நிலையான வருமான திட்டமாகும். குறைந்த பட்சம் 1000 ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.தற்போது இந்த திட்டத்தில் 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழுக்காக செலுத்தப்பட்ட அல்லது டெபாசிட் செய்யப்பட்ட எந்தத் தொகைக்கு வேண்டுமானாலும் நீங்கள் விலக்கு கோரலாம். இதன் அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சமாகும்.

மேலும் படிக்க | சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே

காப்பீட்டு கொள்கைகள் (Insurance Policies)

ஆயுள் காப்பீடு என்பது மக்கள் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக முதலில் கருதும் விஷயங்களில் ஒன்றாகும். காப்பீட்டின் வாழ்க்கைக்குப் பிறகான பலன்கள், சிறந்த வாழ்க்கையை அளித்து, நிதி நெருக்கடியிலிருந்து காப்பீட்டாளரின் குடும்பத்தைப் பாதுகாக்கும். சாதாரணமான நபருக்கு வருமான வரிச் சட்டத்தின் 80U பிரிவின் கீழ் விலக்கு காப்பீட்டுத் தொகையில் 10% -ஐ தாண்ட முடியாது. குறிப்பிட்ட நோய்களைக் கொண்ட நபருக்கு இது 15% ஆக உள்ளது. காப்பீடு என்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்ல, ஒரு ஸ்மார்ட் வரிச் சேமிப்புக் கருவியும் ஆகும். பாலிசிக்காக செலுத்தப்படும் பிரீமியங்கள் உங்கள் வரிக்குரிய வருமானத்திலிருந்து ரூ.25,000 வரை கழிக்கத் தகுதியுடையவை. மூத்த குடிமக்களாக இருக்கும் பெற்றோரின் சுகாதாரக் கொள்கைகளில் பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலம், உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்திலிருந்து ரூ. 30,000 கூடுதல் கழிப்பிற்குத் தகுதி பெறுவீர்கள். இதன் மூலம் இது அதிக வரியைச் சேமிக்க உதவுகிறது.

சுகன்யா சம்ரித்தி திட்டம் (Sukanya Samriddhi Scheme)

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கு வரியைச் சேமிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரசாங்க ஆதரவு சேமிப்புத் திட்டமாகும். இது பெற்றோரை தங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகச் சேமிக்க ஊக்குவிக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா EEE வரி வகையின் கீழ் வருகிறது. அதாவது, நீங்கள் முதலீடு, வருமானம் அல்லது பணத்தை திரும்பப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. பெண் குழந்தை இருக்கும் பெற்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (11A) இன் கீழ் இதில் வரி விலக்கு வழங்கப்படுகிறது. மேலும் SSY திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையவை. அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சம் ஆகும். சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்வதற்கு 8.20 சதவீத வட்டி விகிதம் தற்போது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News