Emergency Loan: பணம் மனித வாழ்வின் இன்றியமையாத அம்சமாக உள்ளது. நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை எப்பொழுதும் இருக்கின்றது. எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பது ஒரு நல்ல பழக்கமாக பார்க்கப்படுகின்றது. எனினும் சில நேரங்களில் நாம் எவ்வளவு திட்டமிட்டாலும் நிலைமை திட்டங்களை மீறி சென்று விடுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கு சில பிரச்சனைகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. இயல்பான வாழ்க்கையில் திடீரென்று நம் முன் தோன்றி நம்மை நிலைகுலைய வைக்கின்றன. அனேகமாக பல பிரச்சனைகளுக்கான தீர்வு பணத்தில் இருக்கின்றது. நம் வாழ்வில் நாம் பலவித பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பொழுது நமக்கு பணத்தேவை ஏற்படுகின்றது. பணம் இருந்தால் பெரும்பாலான சிக்கல்கள் தாமாக தீர்ந்து விடுகின்றன.


ஆனால் சில சமயங்களில் செலவுகளுக்காக நாம் சேர்த்து வைத்துள்ள தொகையும் போதாமல் போய் விடுகின்றது. அத்தகைய நேரங்களில் நாம் பிறரிடம் இருந்து பணத்தை கடனாக பெறுகிறோம். அவசர காலங்களில் திடீரென பண தேவை ஏற்பட்டால் என்ன செய்வது? அவசர காலங்களில் ஏற்படும் நிதி நெருக்கடிகளின் போது, அதிக சிரமம் இல்லாமல் பணத்தை பெறுவதற்கான சில முக்கியமான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


தங்க கடன் (Gold Loan)


உங்களிடம் தங்க நகைகள் இருந்தால் அவற்றுக்கு பதிலாக நீங்கள் கடன் பெறலாம். இது வசதிகரமான ஒரு தேர்வாக பார்க்கப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் சந்தையில் தங்க கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. தனிநபர் கடன் (Personal Loan), சொத்து கடன் (Property Loan), கார்ப்பரேட் கடன் (Corporate Loan) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் தங்கக் கடன் மலிவானதாகவும் இருக்கின்றது. மேலும் பிற கடன்களுடன் ஒப்பிடுகையில் தங்க கடனுக்கான அளவுகோல் மிகவும் எளிதானதாக இருக்கின்றது. உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப கடன் தொகை வழங்கப்படும். ஆகையால் இதில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மேலும் மிக விரைவிலேயே இந்த கடனை பெற்று விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அட்வான்ஸ் சேலரி லோன் (Advance Salary Loan)


மாத சம்பளம் வாங்கும் பணியாளராக நீங்கள் இருந்தால் இந்த வகை கடனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அட்வான்ஸ் சேலரி லோனை வழங்குகின்றன. இந்த கடனில் உங்கள் சம்பள தொகையில் மூன்று மடங்கு தொகை கடனாக அளிக்கப்படும். இந்த கடனின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதற்கு அதிக ஆவணங்கள் தேவைப்படுவதில்லை. சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு எளிதாக கடனை பெறலாம். கடன் பெறுபவர் இந்த கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் இஎம்ஐ மூலம் திருப்பிச் செலுத்தலாம். எனினும் இந்த கடனின் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும். சம்பளம் மீதான இந்த கடன் சுமார் 24-30 சதவீதம் வரையிலான வட்டியில் கிடைக்கக்கூடும்.


மேலும் படிக்க | அட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.... ரூ.28.45 லட்சம் கூடுதலாக கிடைக்கும்


கார் மூலம் கடன் பெறுவது (Loan on Car)


குறுகிய காலத்தில் குறிப்பிட்ட அளவிலான தொகை தேவைப்பட்டால் உங்களிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கொண்டு கடன் பெறலாம். உங்களிடம் கார் இருந்தால் அதை பணயமாக வைத்தும் நீங்கள் கடன் பெறலாம். இதற்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் இந்தப் படிவத்தில் காரின் கம்பனி மாடல், உற்பத்தியான ஆண்டு, கடன் வாங்குவதற்கான காரணம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். அதன்பின்னர் கேட்கப்படும் ஆவணங்களையும் அளிக்க வேண்டும். காரின் மதிப்பை மதிப்பிட்ட பிறகு நிதி நிறுவனங்கள் கடன் தொகையை தீர்மானிக்கின்றன. எனினும் இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. உங்களிடம் உள்ள கார் மாடலுக்கு ஓட்டுனர் கட்டுப்பாடுகள் இருந்தால் வங்கி உங்கள் கடனை நிராகரிக்க கூடும்.


PPF, LIC -இல் கடன் (Loan on PPF, LIC)


நீங்கள் ஏதாவது நீண்டகால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்திருந்து, திட்டத்தை மூட விரும்பவில்லை என்றால், அந்தத் திட்டங்களின் மூலம் கடன் பெறலாம். PPF, LIC போன்ற நீண்டகால திட்டங்களில் உங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். தனி நபர் கடனுடன் ஒப்பிடுகையில் இந்த கடன் மிகவும் மலிவானதாகவும் இருக்கும். எனினும் பிபிஎஃப் இல் நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆறாவது ஆண்டிலிருந்து பகுதி அளவு தொகை திரும்ப பெரும் வசதி உங்களுக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு உயர் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ