தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: IPPB மூலம் இந்த வசதியும் கிடைக்கும்

Post Office: பெரும்பாலான கிராம மக்கள் ஏற்கனவே தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். தற்போது, ​​தபால் துறை கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய முடிவதில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 19, 2024, 01:35 PM IST
  • அரசு திட்டங்களின் நலனை பெற IPPB கணக்குகள் திறக்கப்படுகின்றன.
  • IPPB கணக்குகள் குறித்த சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கே காணலாம்.
  • IPPB செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பல வசதிகளை பெறுகிறார்கள்.
தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: IPPB மூலம் இந்த வசதியும் கிடைக்கும் title=

Post Office: தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி அவர்கள் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. IPPB, அதாவது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி (India Post Payment Bank) மற்றும் தபால் அலுவலகங்களில் இயங்கும் கணக்குகளை இணைத்து, இனி வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெரிய தொகைகளை செலுத்தலாம். IPPB மற்றும் தபால் அலுவலகத்தில் கணக்கு செயல்படும் நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த வசதியின் பலனைப் பெறுவார்கள்.

மூன்றே நிமிடங்களில் கணக்கை திறக்கலாம்

பெரும்பாலான கிராம மக்கள் ஏற்கனவே தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். தற்போது, ​​தபால் துறை கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய முடிவதில்லை. ஆகையால், அதிக அளவு பணப்பரிவர்த்தனைகளுக்கு தபால் நிலைய வாடிக்கையாளர்கள் (Post Office Customers) தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், உடனடியாக பணம் தேவைப்பட்டால், அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அரசு திட்டங்களின் நலனை பெற IPPB கணக்குகள் திறக்கப்படுகின்றன

IPPB கணக்குகளும் தபால் துறை மூலமாகவும் திறக்கப்படுகின்றன. அரசாங்கத் திட்டத்தின் நன்மைகளை எளிதாக பெறவும், பெரும்பாலான மக்கள் இந்தக் கணக்குகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். ஆதார் அட்டை சரிபார்ப்பு மூலம் மூன்றே நிமிடங்களில் கணக்கு தொடங்கும் வசதி மக்களை இதில் பெரும்பாலும் கவர்கிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் டிஏ ஹைக், அசத்தல் ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ

IPPB கணக்குகள் குறித்த சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கே காணலாம்:

- ஐபிபிபி -இல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கியின் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தங்கள் அஞ்சலகக் கணக்கை (Post Office Account) அதனுடன் இணைக்கலாம். 
- தபால் நிலையத்தில் செயல்படும் கணக்கின் வரம்பு 25 ஆயிரம் ரூபாய் வரைதான் உள்ளது.
- எனினும், IPPB -இன் ஆன்லைன் வசதி மூலம், ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் ரூபாய் பரிவர்த்தனையையும் செய்யலாம்.
- தபால் அலுவலகத்தின் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்கிலிருந்து IPPB கணக்கிற்கு ஆன்லைனில் தாமாகவே பணத்தை மாற்றலாம்.
- அதன் பின்னர், IPPB இன் ஆன்லைன் கணக்கிலிருந்து அவர்களின் கணக்கில் உள்ள எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்பலாம். 
- இதன் மூலம் தபால் நிலையத்திற்கு வர வேண்டிய தேவை நீக்கப்படும்.

IPPB செயலி

IPPB செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பல வசதிகளை பெறுகிறார்கள். 

- IPPB இன் செயலியை (IPPB App) பயன்படுத்தி, எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் பணத்தை மாற்றலாம்
- ஆன்லைபில் கட்டணம் / பணம் செலுத்தலாம்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா  எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொகையை டெபாசிட் செய்யலாம்
- இவை தவிர, கணக்கு வைத்திருப்பவர்கள், அஞ்சல் அலுவலகம் மற்றும் IPPB என தங்கள் இரு கணக்குகளின் அறிக்கையையும் பார்க்கலாம்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News