Aadhar Card Update: உங்கள் ஆதார் புகைப்படத்தை மாற்றுவது எப்படி
![Aadhar Card Update: உங்கள் ஆதார் புகைப்படத்தை மாற்றுவது எப்படி Aadhar Card Update: உங்கள் ஆதார் புகைப்படத்தை மாற்றுவது எப்படி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/07/25/239392-phoito-aadhaar.jpg?itok=lmqmV05N)
Updating Data on Aadhaar: ஆதார் அட்டையில் புகைப்படங்களை மாற்றுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் அரசாங்க திட்டங்களைப் பெற விரும்பினாலும் அல்லது வங்கிக் கணக்கைத் தொடங்க விரும்பினாலும், உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும். இந்த ஆதார் அட்டை நாடு முழுவதும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். உங்களிடம் ஆதார அட்டை இல்லையெனில் உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலை கிடைப்பது வரை சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் இந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் ஆதார் எண் போன்ற முக்கிய விவரங்கள் உள்ளன. அதேபோல் இந்த ஆதார் அட்டையில் உங்கள் பயோமெட்ரிக் தரவு விவரவும் இருக்கிறது.
எனவே ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்), ஆதார் அட்டையைப் பயன்படுத்தும் நபர்கள் மொபைல் எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அவ்வப்போது புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள உங்களின் புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதை எளிதாக மாற்றலாம். அதன்படி ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை ஆன்லைனில் அல்லது ஆதார் மையத்திற்குச் சென்று எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்
இதற்கான எளிய செயல்முறையை அறிந்து கொள்வோம்.
* முதலில் நீங்கள் யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) இணையதளமான uidai.gov.in இல் உள்நுழைந்து ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
* ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை இந்த செயல்முறை மூலம் எளிதாக மாற்றலாம். ஆதார் அட்டையில் போட்டோவை மாற்ற ரூ.25 மட்டுமே செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
* உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் சேதமடைந்தாலோ அல்லது அதை மாற்ற விரும்பினாலோ, https://uidai.gov.in என்ற UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.
* இங்கே உள்நுழைவதன் மூலம், படிவத்தைப் பதிவிறக்கவும்.
* பின்னர் படிவத்தை நிரப்பி அருகிலுள்ள ஆதார் மையத்தில் சமர்ப்பிக்கவும்.
* மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் சான்றாக அளிக்க வேண்டும்.
*ஆதார் மையத்தைப் பார்வையிட்ட பிறகு புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும்.
* அதன் பிறகு உங்களுக்கு ரசீது கிடைக்கும்.
* அடிப்படை புகைப்படம் மாறியுள்ளதா என்பதைச் சரிபார்க்க இது உங்களை அனுமதிக்கிறது.பின்னர் ரூ.25 செலுத்த வேண்டும்.
* அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வந்துசேரும்.
மேலும் படிக்க | உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ