தற்போது கிட்டதட்ட அனைத்து சந்தப்பங்களிலும், அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆதார் அட்டை இப்போது கிட்டத்தட்ட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமானதாக ஆகி விட்டது.
ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களின் தனிப்பட்ட அடையாளச் சான்றாகும். இது UIDAI என்னும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பயோமெட்ரிக் விவரங்களும் அடங்கும். UIDAI 12 இலக்க எண்ணைக் கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை பல வழிகளில் பயன்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் நமது ஆதார் அட்டை காலாவதியாகுமா என்பது குறித்த கேள்வியும் எழுகிறது
ஆதார் அட்டை எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
ஆதார் அட்டை உங்கள் அடையாளம், முகவரிச் சான்று மற்றும் வயதுச் சான்றுக்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. இது தவிர, உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் பிற நிதி தொடர்பான விஷயங்களில் கார்டு இணைக்கப்படும்போது, நீங்கள் பல நன்மைகளையும் பெறுவீர்கள். இருப்பினும், ஆதார் அட்டையின் செல்லுபடியை சொன்னால், ஆதார் அட்டை ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். ஆனால், மைனர் குழந்தைகளுக்கு 5 வயதிற்கு பின் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது செல்லுபடியாகும்.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் அட்டை தவறாக பயன்படுத்துவதை தடுக்க செய்ய வேண்டியவை
ஆதார் அட்டை வழங்கப்பட்டவுடன், அது வயது வந்தவரின் வாழ்நாள் முழுவதும் அமலில் இருக்கும். இறந்த பிறகு மட்டுமே, ஆதார் அட்டை செல்லாது.
மைனர் குழந்தைகளுக்கான ஆதார்
இருப்பினும், மைனர் குழந்தைகளின் விஷயத்தில், அதாவது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை குழந்தையின் 5 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும். இதில், குழந்தையின் பயோமெட்ரிக் எடுக்கப்படுவதில்லை. எனவே ஐந்து வயதிற்கு பிறகு, அட்டை பயோ மெட்ரிக் தரவுகளுடன் புதுப்பிக்கப்படும்.
இருப்பினும், நம்பகத்தன்மை காரணமாக பல ஆதார் அட்டைகளை அரசு செயலிழக்கச் செய்துள்ளது. பலரது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் இருந்ததால் பல கார்டுகள் செயலிழந்தன. உங்கள் கார்டு செல்லுபடியாகுமா இல்லையா என்று நீங்கள் யோசித்தால், உங்கள் ஆதார் அட்டையின் செல்லுபடியை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
ஆதார் அட்டையை சரிபார்க்கும் முறை
- UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- இணையதளத்தில் ஆதார் சேவைகள் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில், “ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்” என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள்.
- பின்னர் "ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும், அது உங்களை புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
- இப்போது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
- இப்போது Verify என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் எண் சரியானதாக இருந்தால், ஆதார் எண் சரிபார்ப்பின் நிலையைக் காட்டும் செய்தி தோன்றும். ஆதார் எண் செயலில் இல்லை என்றால், அந்த எண் இல்லை என்று பச்சை நிற செக் மார்க் தோன்றும்.
மேலும் படிக்க | Aadhaar: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமலும் ஆதாரை பதிவிறக்கலாம், செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR