EPFO Balance Check: மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஒரு தொகையை டெபாசிய் செய்கிறார்கள். நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. பிஎஃப் தொகையானது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு மிக முக்கியமான ஒரு நிதி பாதுகாப்பாக அமைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் கணக்கில் மாதா மாதம் தங்கள் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு வருகிறதா, வட்டித் தொகை போடப்படுகிறதா என்பதை அவ்வப்போது செக் செய்ய வேண்டும். இபிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை சேர்ந்துள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இதற்கு பிஎஃப் அலுவலகத்திற்குத்தான் செல்ல வேண்டுமா? இதை தெரிந்துகொள்ள வேறு வழிகள் இருக்கின்றனவா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்?


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF என்பது ஒரு தேசிய சேமிப்புத் திட்டமாகும். இது பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான போதுமான தொகையைச் சேமிக்க உதவுகிறது. EPFO கணக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களால் சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக திறக்கப்படுகிறது. இபிஎஃப் தொகையை செக் செய்ய இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆஃப்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்யலாம். 


மேலும் படிக்க | HRA க்ளெய்ம் செய்கிறீர்களா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை


ஆஃப்லைன் முறை


எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? (How to Check EPF Balance through SMS?)


UAN போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்குச் SMS அனுப்பி EPFO இல் இருந்து விவரங்களைப் பெறலாம்.


- இதற்கு முதலில் உங்கள் மொபைலில் மெசேஜ் பகுதியைத் திறந்து EPFOHO என டைப் செய்யவும், அதன் பிறகு உங்கள் UAN எண்ணையும் உங்கள் மொழியின் முதல் மூன்று எழுத்துக்களையும் டைப் செய்யவும். உதாரணமாக, நீங்கள் தமிழில் செய்தியை பெற TAM என டைப் செய்ய வேண்டும்.


- 7738299899 என்ற எண்ணிற்கு இந்த செய்தியை SMS செய்யவும்.


- உங்கள் UAN உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து செய்தியை அனுப்பவும். வேறொரு எண்ணிலிருந்து SMS அனுப்பப்பட்டால், EPFO உங்கள் PF இருப்பை வெளிப்படுத்தாது.


மிஸ்டு கால் மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி? (How to Check EPF Balance through Missed Call?)


- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.


- EPFO உங்கள் PF இருப்பை குறுஞ்செய்தி மூலம் அனுப்பும்.


இது தவிர ஆன்லைனில் இபிஎஃப்ஓ வலைத்தளம் (EPFO Website) மற்றும் உமங் செயலி (UMANG App)மூலமாகவும் இபிஎஃப் இருப்பை செக் செய்யலாம்.


EPF Balance: உங்கள் UAN ஐ எவ்வாறு செக் செய்வது? 


ஒரு இபிஎஃப் உறுப்பினர் தனது UAN ஐ மறந்துவிட்டால், அவர்/அவள் unifiedportal-mem.epfindia.gov.in -க்கு சென்று அதில் கேட்கப்பட்ட ளை அளித்து யுஏஎன் -ஐ தெரிந்துகொள்ளலாம். 


- பிரதான பக்கத்தில் உள்ள ‘Know your UAN’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.


- உங்கள் EPF கணக்கு எண் மற்றும் உறுப்பினர் ஐடி போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.


- அங்கீகார PIN பெறப்படும்.


- அதை உள்ளிடவும்.


- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UAN அனுப்பப்படும்.


- உங்கள் UAN ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், நீங்கள் ‘Activate Your UAN’ என்பதைக் கிளிக் செய்து, EPFO குறிப்பிடும் செயல்முறைகளைப் பின்பற்றலாம்.


மேலும் படிக்க | 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ