HRA க்ளெய்ம் செய்கிறீர்களா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை

HRA Claim in ITR: சம்பளம் பெறும் நபர்களுக்கு HRA க்ளைம் செய்வதால் வருமான வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், இதற்குக பணியாளர் வாடகை வீட்டில் வசிப்பது அவசியம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 22, 2024, 09:07 PM IST
  • சரியான வாடகை ஒப்பந்தத்தின் நகலை நிறுவனத்திடம் கொடுங்கள்.
  • வீட்டு உரிமையாளரின் பான் எண்ணைக் கேட்டு, நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட படிவத்தில் சரியான பான் எண்ணை உள்ளிடவும்.
  • போலி வாடகை ரசீதுகளை உருவாக்க வேண்டாம்.
HRA க்ளெய்ம் செய்கிறீர்களா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை title=

HRA Claim in ITR: வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் ITR (வருமான வரி அறிக்கை) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க, ஜூலை 31 க்கு முன் வருமான வரி தாக்கல் செய்வது அவசியமாகும். நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்து, இந்த முறை பழைய வரி முறையின் (Old Tax Regime) மூலம் வருமான வரி செலுத்தப் போகிறீர்கள் என்றால், வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது HRA க்ளெய்ம் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பலர் வரியைச் சேமிப்பதற்காக எச்ஆர்ஏ -வை தவறான முறையில் கோருவது சமீபகாலமாக வருமான வரித்துறைக்கு தெரிய வந்துள்ளது. வரி செலுத்துவோர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். 

சம்பளம் பெறும் நபர்களுக்கு (Salaried Class) HRA க்ளைம் செய்வதால் வருமான வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், இதற்குக பணியாளர் வாடகை வீட்டில் வசிப்பது அவசியம். நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மட்டுமே HRA பெற முடியும். HRA க்ளெய்ம் செய்ய, சம்பளம் பெறும் ஊழியர் வாடகை ரசீது மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் நகலை நிறுவனத்தின் HR -க்கு வழங்குகிறார். பல நிறுவனங்கள் பணியாளரிடம் இதற்கான ஒரு படிவத்தையும் நிரப்பச் சொல்கிறார்கள். அதில் வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் அவரது பான் எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஒரு நபர் வாடகை வீட்டில் இல்லாம்ல, அவரது பெற்றோர் அல்லது உறவினருடன் வசித்து, அங்கிருந்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், அப்போதும் அவர் HRA இன் பலனைப் பெறலாம். இதற்கு, வரி நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

மேலும் படிக்க | 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்

HRA க்ளெய்ம் செய்யும்போது கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களை பற்றி இங்கே காணலாம்: 

- நீங்கள் இருக்கும் வீட்டின் ரெண்ட் அக்ரீமெண்ட், அதாவது வாடகை ஒப்பந்தத்தைப் பெற்று, சரியான வாடகை ஒப்பந்தத்தின் நகலை நிறுவனத்திடம் கொடுங்கள்.
- வீட்டு உரிமையாளரின் பான் எண்ணைக் கேட்டு, நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட படிவத்தில் சரியான பான் எண்ணை உள்ளிடவும்.
- போலி வாடகை ரசீதுகளை உருவாக்க வேண்டாம். வீட்டு உரிமையாளர் ரசீது கொடுக்கவில்லை என்றால், ரசீது புத்தகத்தை நீங்களே கொண்டு வந்து, வீட்டு உரிமையாளருக்குத் தெரிவித்து, கட்டணத்துக்கான ரசீதை உருவாக்கி, வீட்டி உரிமையாளரிடம் கையெழுத்துப் பெறுங்கள்.
- வீட்டு வாடகையை வீட்டு உரிமையாளருக்கு பணமாக செலுத்த வேண்டாம். எப்பொழுதும் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள். அப்படி செய்தால் பின்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். 
- வீட்டு உரிமையாளர் பான் எண்ணை வழங்கவில்லை என்றால், எந்த நபரின் பான் எண்ணையும் உள்ளிட வேண்டாம். பின்னர், நீங்களும் பான் எண்ணை வைத்திருக்கும் நபரும் சிக்கல்களைச் சந்திக்கலாம்.

வீட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் கிடைக்கலாம்

நீங்கள் ஒரு வீட்டு உரிமையாளராக இருந்து, உங்கள் வீட்டில் வாடகைக்கு யாரேனும் குடியிந்தால், அவருக்கு உறுதி செய்யப்பட்ட வாடகை ரசீதைக் கொடுங்கள். நீங்கள் இதைச் செய்யாமல், வீட்டில் பாடகைக்கு இருப்பவர் உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தினால், வருமான வரித்துறையிலிருந்து (Income Tax Department) உங்களுக்கு நோட்டீசும் (Income Tax Notice) வரக்கூடும். வாடகை பெறுவதில் நேர்மையைக் காட்டி, வருமான வரிக் கணக்கை நீங்களே தாக்கல் செய்வது நல்லது.

மேலும் படிக்க | EPFO விதிகளில் பெரிய மாற்றம்: இனி நாமினிக்கு எளிதாக பணம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News