44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த நல்ல செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

8th Pay Commission: இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு 2013ல் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. இந்த அடிப்படையில் பார்த்தால், ஜூன் மாதம் புதிய அரசு அமைந்த பிறகு, 10 ஆண்டு கால முறைப்படி, 2025-26ல் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படலாம். 

1 /8

அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலையில் 54% ஆக உயரும். தற்போது ஊழியர்கள் 50 சதவீதம் அகவிலைப்படி அதாவது டிஏ -ஐ பெற்று வருகின்றனர். 

2 /8

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், அது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு, அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும். அதன் பிறகு 1%,2%,3% என அகவிலைப்படி உயரும். ஆனால், இந்த சம்பள திருத்தம் செய்ய புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.   

3 /8

புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் புதிய ஊதியக்குமு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்த அரசாங்கம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

4 /8

இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு 2013ல் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. இதில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாக வைத்து 2.57 மடங்கு உயர்த்தி, சம்பளம் 14.29% ஆக உயர்ந்து அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆக அதிகரித்தது. 

5 /8

இந்த அடிப்படையில் பார்த்தால், ஜூன் மாதம் புதிய அரசு அமைந்த பிறகு, 10 ஆண்டு கால முறைப்படி, 2025-26ல் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 இல் இருந்து 3.68 ஆக உயரும் என கூறப்படுகின்றது.  

6 /8

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்ந்தால் அதன் அடிப்படையில் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக உயர்த்தப்படும். இது ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படக்கூடும். அரசு வழக்கமான ஊதியக்குழு முறைகளை பின்பற்றினால் இந்த ஏற்றங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

7 /8

இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் சம்பள கமிஷன் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு அமைக்கப்பட்ட உடனேயே இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.