சிபில் ஸ்கோர் என்றால் என்ன..அதனை சரிபார்ப்பது எப்படி?
ஒருவரது சிபில் ஸ்கோர் மதிப்பெண் அளவை வைத்து தான் வங்கிகளில் அந்நபருக்கு கடன் தொகை வழங்கப்படுகிறது.
வங்கிகளில் கடன் பெற நினைப்பவர்கள் சிபில் ஸ்கோரை சரிபார்த்துக்கொள்வது அவசியமானதாகும். சிபில் மதிப்பெண் என்பது மூன்று இலக்கங்களை கொண்ட எண்ணாகும், இது ஒருவர் கடன் பெற வழிவகுக்கிறது மற்றும் கடன் வாங்க விண்ணப்பிக்கும்போது இந்த மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து தான் வங்கிகளில் ஒருவருக்கு கடன் தொகை வழங்கப்படுகிறது. வீட்டுக்கடன், வாகனக்கடன் அல்லது தனிநபர் கடன் என எந்த வகை கடனாக இருந்தாலும் இந்த சிபில் ஸ்கோர் மதிப்பெண் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்
கடன் வழங்குபவர்கள் உங்களுக்கு கடன் வழங்கும்போதோ அல்லது புதிய க்ரெடிட் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும்போதோ அல்லது விதிமுறைகளை இறுதி செய்யும்போதோ உங்களது சிபில் ஸ்கோரை தான் கவனத்தில் வைத்து கொள்கின்றனர். ஒரு நல்ல சிபில் மதிப்பெண் பெற்றிருப்பது பல சமயங்களில் குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெறுவதற்கு உதவுகிறது, உங்கள் சிபில் ஸ்கோர் அள்வு அதிகமாக இருந்தால், உங்களுக்கு அதிகமான கடன் தொகை வழங்கப்படும். க்ரெடிட் ஸ்கோர் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும், அதிகம் நிராகரிக்க வாய்ப்புள்ள கடன் விண்ணப்பங்களை அனுப்புவதை தவிர்க்கவும். ஒருவரது சிபில் ஸ்கோரை எப்படி சரிபார்ப்பது என்று இங்கே பார்க்கலாம்.
டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டதால் நீங்கள் பல ஆன்லைன் தளங்களில் சிபில் ஸ்கோரை சில நிமிடங்களிலேயே பார்க்கலாம். சிபில் ஸ்கோரை பார்க்க சிபில் இணையதளத்தில் இலவசமாக நீங்கள் உள்நுழையலாம் அல்லது நிதி நிறுவனங்களின் பிற சேவைகளையும் பயன்படுத்தலாம். உங்கள் பெயர், பிறந்த தேதி, அடையாளச்சான்று, தொடர்பு எண், முகவரி மற்றும் வருமான உள்ளிட்ட சில முக்கியமான விவரங்களை படிவத்தில் நிரப்ப வேண்டும். சிபில் மற்றும் க்ரெடிட் ஸ்கோருக்கான அணுகலை பெற்றதும் அதில் ஏதேனும் தவறுகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
பொதுவாக சிபில் ஸ்கோர் 850 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அது சிறப்பானதாக கருதப்படுகிறது, இது அதிக கடன் தொகையை பெற உதவுகிறது. 750 முதல் 849 வரையிலான சிபில் ஸ்கோர் கடன் பெற தகுதியானதாக கருதப்படுகிறது, 700 முதல் 749க்கு இடைப்பட்டதாக இருந்தால் ஓரளவு கடன் கிடைக்கும். மேலும் 650க்கு குறைவாக சிபில் ஸ்கோர் இருந்தால் உங்கள் சிபில் ஸ்கோரை உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அர்த்தம்.
மேலும் படிக்க | PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி? எளிய வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR