வருமான வரி பிரிவால் வழங்கப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று தான் இந்த பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்.  பான் கார்டில் உள்ள 10 இலக்க எண்ணில் தான் உங்களது வரி தொடர்பான அனைத்துவித முக்கியமான தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன, அதனால் பான் கார்டு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  இப்போது வருமான வரித்துறை உங்களுக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது, அதாவது இதனை அட்டையாக கையில் வைத்துக்கொள்ளாமல், இ-பான் கார்டு பிடிஎஃப்-ஐ டவுன்லோடு செய்து உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.  இவ்வாறு உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் செல்லும் இடங்களுக்கு பான் கார்டை கையில் எடுத்துச்செல்லவேண்டிய அவசியமில்லை, மொபைலில் சேமித்துவைத்துள்ள இ-பான் கார்டை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தி கொள்ளலாம், இப்போது இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்யலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆதார் கார்ட் எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா? உடனே இந்த மாற்றங்களை பண்ணிடுங்க!


இ-பான் கார்டை டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகள் :


1) அதிகாரப்பூர்வ NSDL E-PAN கார்டு டவுன்லோடு செய்ய https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்கிற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.


2) இ-பான் கார்டை டவுன்லோடு செய்ய உங்களுக்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளன. ஒன்று பான் கார்டைப் பயன்படுத்துவது, மற்றொன்று அக்னாலெட்ஜ்மென்ட் எண்ணைப் பயன்படுத்துவது.


3) அதில் நீங்கள் எந்த விருப்பத்தை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்கலாம்.


பான் கார்டை பயன்படுத்தி இ-பான் கார்டை டவுன்லோடு செய்யும் வழிகள்;


1) பான் கார்டின் 10 இலக்க எண்ணை பயன்படுத்த வேண்டும்.


2) பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, கேட்ச் கோட் மற்றும் ஆதார் எண் போன்றவற்றை உள்ளிடவும்.


3) தேவையான தகவலை அளித்தபின், அதிலுள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.


4) கேப்ட்சாவை நிரப்பி "சமர்ப்பி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


5) இப்போது இ-பான் கார்டின் பிடிஎஃப் திரையில் தெரியும்.


6) இ-பான் கார்டை டவுன்லோடு செய்ய 'டவுன்லோட் பிடிஎஃப்' என்பதைக் கிளிக் செய்யவும்.


அக்னாலெட்ஜ்மென்ட் எண்ணைப் பயன்படுத்தி இ-பான் கார்டை டவுன்லோடு செய்யும் வழிகள்;


1) அக்னாலெட்ஜ்மென்ட் எண்ணை பயன்படுத்தவும்.


2) உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.


3) சமர்ப்பி என்பதை க்ளிக் செய்யவும்.


4) இப்போது இ-பான் கார்டின் பிடிஎஃப் திரையில் தெரியும்.


5) இ-பான் கார்டை டவுன்லோடு செய்ய 'டவுன்லோட் பிடிஎஃப்' என்பதைக் கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ