PPF Return Calculator: நாம் பணம் ஈட்டுவது எவ்வளவு அவசியமோ, அதை சேமிப்பதும், முதலீடு செய்து பெருக்குவதும் அதே அளவு அவசியமாகும். முதலீட்டைத் தொடங்கி, வட்டியில் இருந்து நல்ல வருமானம் ஈட்டி, ரிஸ்க் எடுக்காமல் நல்ல வருமானத்தை பெற பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மிக சிறந்த திட்டமாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Public Provident Fund


இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களே விளக்குகின்றன. நல்ல வட்டி, வரியில்லா முதலீடு ஆகியவற்றுடன் முதிர்ச்சியில் பெறப்படும் பணம் முற்றிலும் முதலீட்டாளருடையது என்பது குறிப்பிடத்தக்கது. முதலீட்டு பார்வையில் இது ஒரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகின்றது.


பிபிஎஃப் திட்டத்தின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள். ஆனால், முதலீட்டை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நீட்டிக்க முடியும். கணக்கை நீட்டித்தால், உங்கள் வருமானம் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும். உதாரணமாக, இந்த திட்டத்தின் மூலம் ரூ.5,000 ஆரம்ப முதலீட்டில் ரூ.26 லட்சத்தை தாண்டி வருமானம் பெறலாம். இதற்கான கணக்கீடு என்ன? அதை இங்கே விரிவாக காணலாம். 


முதிர்ச்சியின் போது 3 விருப்பங்கள் கிடைக்கும்


முதிர்வு நேரத்தில் முதலீட்டாளர்கள் 3 விருப்பங்களைப் பெறுவார்கள். இந்த 3 விருப்பங்களைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். 
- முதலில், முதிர்ச்சியடைந்த பிறகு உங்கள் பணத்தை எடுக்கலாம்.
- இரண்டாவதாக, பணத்தை எடுக்காவிட்டாலும், வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
- மூன்றாவதாக, புதிய முதலீட்டுடன், 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு பெறலாம்.


1. முதிர்வு நேரத்தில் முழுப் பணத்தையும் எடுக்கும் முறை


PPF கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், நீங்கள் டெபாசிட் செய்த தொகையையும் வட்டியையும் திரும்பப் பெறலாம். கணக்கு மூடப்பட்டால், முழுப் பணமும் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும். முதிர்வு காலத்தில் பெறப்படும் பணம் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும். இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. திட்ட காலம் முழுவதும் நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.


2. PPF முதலீட்டை 5 ஆண்டுகளுக்கு அதிகரிப்பது


இரண்டாவது விருப்பம், முதிர்வுக்குப் பிறகு முதலீட்டை அதிகரிப்பதாகும். இந்த திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கான டென்யூரில் கணக்கு நீட்டிப்புக்கான விருப்பம் வழங்கப்படுகிறது. இருப்பினும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க விரும்பினால், பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடைவதற்கு 1 வருடத்திற்கு முன்பு வங்கி அல்லது தபால் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். எனினும், கணக்கு நீட்டிப்புக்கு, ப்ரீ-மெச்யூர் வித்ட்ராயல் விதிகள் என்பதும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் என்பதும் இதில் உள்ள நல்ல விஷயமாகும்.


மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம்... எப்போது? எவ்வளவு எடுக்கலாம்? அப்டேட் இதோ


3. முதிர்வுக்குப் பிறகும் முதலீட்டை அதிகரிக்காமல் திட்டத்தில் தொடரலாம்


PPF கணக்கில் மூன்றாவது விருப்பம் என்னவென்றால், மேலே உள்ள இரண்டு விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யாவிட்டாலும், முதிர்வு முடிந்த பிறகு கணக்கு தொடர்ந்து செயல்படும். இதில் புதிய முதலீடு தேவைப்படாது. முதிர்வு தானாகவே 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும். ஆனால், இந்த முழு காலகட்டத்திலும் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும் என்பது இதில் உள்ள மிகப்பெரிய நன்மை. இதற்குப் பிறகு, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் இதை அதே முறையில் நீட்டிக்கலாம்.


PPF Account: பிபிஎஃப் கணக்கை எங்கு திறப்பது?


PPF கணக்கை அனைத்து அரசு அல்லது தனியார் வங்கியிலும் தொடங்கலாம். இது தவிர, உங்கள் நகரின் அனைத்து அஞ்சல் அலுவலக கிளைகளிலும் நீங்கள் கணக்கைத் திறக்கலாம். மைனர்கள் கணக்கை திறக்கும் விருப்பம் உள்ளது. இருப்பினும், மைனர் சார்பாக பெற்றோரிடம் 18 ஆண்டுகளுக்கு கணக்கின் உரிமை இருக்கும். நிதி அமைச்சக விதிகளின்படி, இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) PPF கணக்கைத் திறக்க முடியாது.


PPF Calculator: ரூ.500 முதலீட்டை ரூ.26.63 லட்சமாக அதிகரிப்பது எப்படி?


- தற்போது பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. 
- வட்டி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 
- ஆனால், காலாண்டு அடிப்படையில் வட்டி முடிவு செய்யப்படுகிறது. 
- பிபிஎஃப் வட்டி விகிதங்களில் சில காலமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- நீங்கள் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒரே வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், பல்வேறு தொகைகளில் ஒரு பெரிய கார்பஸை உருவாக்கலாம். 


கணக்கீட்டை இங்கே காணலாம்


இந்த அரசு திட்டத்தில் 500 ரூபாயில் கூட முதலீட்டைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் இதில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்வது அவசியமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு 6000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். பிபிஎஃப் கால்குலேட்டரின் படி, 15 ஆண்டுகளில் இதன் மூலம் ரூ.1,62,728 சேர்க்கலாம். அதேசமயம், இந்த திட்டத்தை இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால், 20 ஆண்டுகளில் ரூ.2,66,332 சேர்க்கலாம். 


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு விரைவில்? தொழிலாளர்களின் கூட்டமைப்பின் கோரிக்கை, தீவிரமாக சிந்திக்கும் அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ