8வது ஊதியக்குழு விரைவில்? தொழிலாளர்களின் கூட்டமைப்பின் கோரிக்கை, தீவிரமாக சிந்திக்கும் அரசு

8th Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2024, 12:36 PM IST
  • 8வது ஊதியக்குழு அமைக்கப்படுமா?
  • அரசின் நிலைப்பாடு என்ன?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா?
8வது ஊதியக்குழு விரைவில்? தொழிலாளர்களின் கூட்டமைப்பின் கோரிக்கை, தீவிரமாக சிந்திக்கும் அரசு title=

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் முக்கியமான சில அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு. 8வது ஊதியக்குழு அமைக்கப்படுமா? அரசின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா? இவற்றை பற்றி இந்த பதிவை காணலாம். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில்,, பொதுச்செயலாளர் எஸ்.பி.யாதவ், ‘பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், அதிகரிக்கும் விலைவாசியாலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால் 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஊழியர்களின் வருமானத்தில் பெரும் அழுத்தம் உள்ளது. அதைச் சமாளிக்க ஊதியக் குழுவை உருவாக்குவது அவசியம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் தேவை

மத்திய ஊழியர்களின் சம்பளம் குறித்து கூறியுள்ள எஸ்.பி.யாதவ், ‘மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 7வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் பின்னர் பணவீக்க விகிதத்தில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவிட் -19 க்குப் பிறகு, அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வட்டி விகிதங்களின் அதிகரிப்பு ஊழியர்களின் வாழ்க்கை முறையை மோசமாக பாதித்துள்ளது. ஜூலை 1, 2024 இல் அகவிலைப்படி (DA) விகிதம் 53% ஐ எட்டியுள்ளது. இது பணவீக்கம் கடந்த 9 ஆண்டுகளில் ஊழியர்களின் வருமானத்தை கணிசமாக பாதித்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

7th Pay Commission: சம்பள கமிஷன் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவு

7வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் அது அமலுக்கு வர, சுமார் 2 ஆண்டுகள் ஆயின. ஊதியக் குழுவை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் நேரம் எடுக்கும். இதன் அறிவிப்பிலேயே தாமதம் ஏற்படுவதால், ஊழியர்களுக்கு நிதி அழுத்தம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.1000 முதலீட்டை ஒரு கோடி ரூபாயாக மாற்றிய முதலீட்டு ஃபார்முலா

Pay Structure: ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்குவது மட்டுமல்லாமல், நாட்டின் சிறந்த திறமைசாலிகள் அரசுத் துறையில் பணியாற்றுவதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும். தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள திருத்தம் நடைபெறுவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தம் செய்யப்படுவதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பானது சந்தையில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒத்திசைந்தும், அதிக கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும் வகையில் சீரானதாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து ஊழியர்கள் இடையே நிலவுகிறது.

Salary Hike: 

அரசாங்கம் 8வது ஊதியக் குழுவை அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சுமார் 186 சதவீதம் ஏற்றம் காணும். இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்ளுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால்,

-  Salary Hike: குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம்.
- Pension Hike: தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். 

'8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான சரியான தருணம் வந்துவிட்டது. இன்னும் தாமதம் செய்யப்படக்கூடாது. பணவீக்கம் மற்றும் பண மதிப்பு குறைவதன் காரணமாக, நிதி நெருக்கடியில் உள்ள ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) நல்ல வாழ்க்கையை நடத்துவதற்கு 8வது ஊதியக்குழுவை அமைப்பது அவசியம். இதன் மூலம் ஊழியர்கள் இன்னும் திறம்பட உழைத்து அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை சீராக செயல்படுத்தி அவற்றின் பலன் சாமானிய மக்களே சரியான தருணத்தில் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்' என்று கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPS: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா? மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News