அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாங்கும்  பலர் உள்ளனர் என்றாலும், ஸ்மார்ட்போன்களுக்காக அதிக செலவு செய்ய விரும்பாத சிலர் இன்னும் இருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா ( Corona) நெருக்கடியில் ஸ்மார்ட்போன் என்பது அவசியமான பொருளாகிவிட்டது. 5,000 பட்ஜெட்டில் கூட  சிறந்த 4 ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.


குறைந்த விலையில் 4 ஜி ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்காக நாங்கள் சில தரவுகளை சேகரித்து  இங்கே  உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இந்த ஸ்மார்ட்போன்களில், 4 ஜி சப்போர்டுடன்  சிறந்த பர்பார்மென்ஸ், கேமரா, சிறந்த லுக்  ஆகியவை உள்ளன. ரூ .5,000 விலையில் கிடைக்கும் சிறந்த 4 ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.


ஜியோமி ரெட்மி கோ (Xiaomi Redmi Go)


4 ஜி வசதி உள்ள ஸ்மார்ட்போனில், குறைந்த விலையில் சிறந்த தேர்வாக இது இருக்கும். ரெட்மி கோ இரண்டு ஸ்டேரேஜ் வகைகளில் கிடைக்கிறது. இது 1GB+8GB மற்றும் 1 1GB+16GB  ஸ்டோரேஜ் அளவில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .4,999 என்றாலும், தற்போது இது ரூ .2,999 விலையில் நிறுவனத்தின் வலைதளத்தில் கிடைக்கிறது. இது 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 1280X720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசயூஷனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 425 ப்ராஸஸரில் இயங்குகிறது.  இது Android Oreo Go edition அடிப்படையாகக் கொண்டது. இது 3000mAh பேட்டரி கொண்டுள்ளது. தொலைபேசியில் 8MP ரியர் கேமரா மற்றும் 5MP பரண்ட் கேமரா உள்ளது.


ALSO READ | Loan moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..!!!


லாவா  Z60 (Lava Z60) 


இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவாவின் பட்டியலில் பல சிறந்த ஸ்மார்ட்போன்களும் உள்ளன. லாவா Z60 அவற்றில் ஒன்று. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜி சப்போர்ட் உள்ளது. இதன் விலை ரூ .4,999. இது 5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில், நீங்கள் 5MP முன் மற்றும் 5MP பின்புற கேமரா உள்லது. இந்த தொலைபேசியில் 2500mAh பேட்டரி உள்ளது.


Samsung Galaxy M01 Core


இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .4,999. இது MediaTek MT6739  சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 3,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், நீங்கள் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமரா உள்ளது. 


ஜியோபோன் 2  (JioPhone 2)


ஜியோபோன் 2 விலை 2,999 ரூபாய். இது சிறந்த 4 ஜி இணைப்பு கொண்ட தொலைபேசியாகும். இது ஸ்மார்ட்போன் அல்ல, ப்யூச்சர் ஃபோன் என்றாலும், வாட்ஸ்அப், யூடியூப், கூகிள் அசிஸ்டென்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை இதில் பயன்படுத்தலாம். 


ALSO READ | ₹2000 நோட்டுகள் நிலை என்ன... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கை..!!!