₹2000 நோட்டுகள் நிலை என்ன... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கை..!!!

2000 ரூபாய் நோட்டுகளின் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 20, 2020, 02:55 PM IST
₹2000  நோட்டுகள் நிலை என்ன... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கை..!!!

2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டதாக சமீபத்தில் பல தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 31, 2020 நிலவரப்படி, நாடு முழுவதிலும், 2000 ரூபாயின் 27,398  நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்று நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார். 31 மார்ச் 2019 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 32,910 ஆக இருந்தது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, ​​ரிசர்வ் வங்கி உடனடியாக ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியது.

2019-20 மற்றும் 2020-21 காலங்களில் 2000 ரூபாய் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(Nirmala Sitaraman)  நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவது குறித்து இது வரை எந்த  முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க | Loan moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..!!!

நோட்டுகளை அச்சிடுவது தொடர்பான எந்த தகவலையும் அரசு இதுவரை வழங்கவில்லை என்று நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். நோட்டுகளை அச்சிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ( RBI) கலந்தாலோசித்த பின்னரே அரசு சில முடிவுகளை எடுக்கும் என்றும் கூறினார்.

2019-20 மற்றும் 2020-21 காலங்களில் 2000 ரூபாய் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்த நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் கூறினார்.

கொரோனா காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி படிப்படியாக நோட்டுகளை அச்சிடும் பணி தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது ரிசர்வ் வங்கியின் பாரதீய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited - BRBNMPL) மூலம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து,, மார்ச் 23 முதல் மே 3 வரை ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது.

பின்னர் மே 4  நான்காம் தேதி முதல் நாட்டில் ரூபாஉ நோட்டுகள் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கோவிட் 19 தொற்றுநோயால் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது பாதிக்கப்பட்டுள்ளதாக செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) தெரிவித்துள்ளது என்று நிதித்துறை இணை அமைச்சர்  அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்...மாதம் ₹14,000 பென்ஷன் பெற வழி இருக்கு..!!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR