ஆதார் - பான் கார்டு இணைப்பிற்கு அபராத தொகை செலுத்துவது எப்படி?
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31,2023 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டுடன் பான் கார்டை காட்டாயமாக இணைக்க வேண்டும் என மக்களை அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போது அரசாங்கம் இதற்கான காலக்கெடுவினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) கடந்த மார்ச் 29,2022 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31,2023 வரை அவகாசம் வழங்குவதாக அறிவித்திருந்தது. மேலும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு பின்னர் ஏப்ரல் 1, 2022 முதல் முதல் ஆதார்-பான் இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சிபிடிடி தெரிவித்திருந்தது.
இதுகுறித்த அறிவிப்பில், மார்ச் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துக்கொள்ளலாம். அப்படி அந்த தேதிக்குள் இணைக்காதவர்கள் ஜூன் 30, 2022 வரை அபராதமாக ரூ.500 கட்டணம் செலுத்தி இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் இணைக்க முயற்சிப்பவர்கள் ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க எப்படி அபராதம் செலுத்துவது என்பதை இங்கே காண்போம்.
1) ஆதார்-பான் இணைப்பை சமர்ப்பிக்க முதலில் http://sonlineservices.tin.ego.nsdl.com/etaxnew/tdsnontds.jsp போர்ட்டலுக்கு செல்லவும்.
2) ஆதார்-பான் இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்க சலான் எண்./ITNS280ன் கீழ் தொடர்வதும் என்பதை க்ளிக் செய்யவேண்டும்.
3) பொருந்தக்கூடிய வரியை தேர்ந்தெடுக்கவும்.
4) மைனர் ஹெட் 500 மற்றும் மேஜர் ஹெட் 0021 ஆகியவற்றின் கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்துவதை உறுதிசெய்யவும்.
5) நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் தேர்ந்தெடுக்கவும்.
6) பான் எண்ணை உள்ளிட்டு மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுத்து முகவரியை பதிவு செய்யவும்.
7) இப்போது சரியாக கேப்ட்சாவை உள்ளிட்டு தொடரு என்பதை க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க | PM KISAN 11வது தவணை தொகை இன்னும் பணம் வரவில்லையா; இதை செய்தால் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR