SBI UPI money transfer: டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு வேகமாக அதிகரித்துள்ளது. யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது பணம் செலுத்துவதற்கு மக்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான வழியாக இப்போது மாறிவிட்டது. இது எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் UPI-ஐப் பயன்படுத்தும் போது, ​​பயனர்களும் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அண்மைக்காலமாக UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்பது அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களிடமும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PPF Scheme: உடனே இதை செய்யுங்கள், வருமான வரி பணத்தை சேமிக்கலாம்


SBI UPI பேமெண்ட் (BHIM SBI UPI) செய்யும் போது உங்கள் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், பயப்பட வேண்டாம். 2 வழிகளில் புகார் செய்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பொறுத்தவரை தங்கள் பணப் பரிவர்த்தனைகளை யோனோ லைட் ஆப் (YONO LITE SBI ஆப்) மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்யலாம். SBI YONO செயலி நீங்கள் பணத்தை அனுப்ப விரும்பும் நபரை பதிவு செய்யாமலேயே பணத்தை மாற்ற அனுமதிக்கிறது. பயனாளியின் யுபிஐ ஐடியைப் பயன்படுத்தி நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்றால், பயனாளி கட்டாயமாக UPI இல் பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை தோல்வியுற்ற பரிவர்த்தனையின் தொகையை 48 மணி நேரத்திற்குள் தானாகவே திருப்பித் தரவில்லை என்றால், வாடிக்கையாளர் 2 வழிகளில் புகார் செய்து பணத்தைப் பெறலாம்.


எப்படி புகார் அளிப்பது?


UPI பணப் பரிவர்த்தனை ஒருவேளை தோல்வியடைந்து உங்கள் தொகை திருப்பித் தரப்படவில்லை என்றால், யோனோ லைட் ஆப் வழியாகவே நீங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இதற்கு, நீங்கள் செயலியின் 'பேமெண்ட் ஹிஸ்டிரி'-க்கு செல்ல வேண்டும். பின்னர் தோல்வியடைந்த பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் 'Raise Dispute’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் புகாரைப் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.


மற்றொரு வழி


செயலியில் பணம் செலுத்துதல் தொடர்பான புகாரைச் செய்த பிறகு பரிவர்த்தனை விவரங்களையும் அனுப்பலாம். உங்கள் விவரங்களை support.upi@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் பணம் செலுத்திய தேதி, தொகை மற்றும் 12 இலக்க பரிவர்த்தனை குறிப்பு எண்ணை அனுப்ப வேண்டும். பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான சிக்கல்களுக்கு நீங்கள் RRN அதாவது மீட்டெடுப்பு குறிப்பு எண்ணை அனுப்பலாம்.


மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், அடிப்படை ஊதியத்தில் 17% ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ