NPS கணக்கில் நாமினி பெயரை அப்டேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ
National Pension System: NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
National Pension System: ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெற தேசிய ஓய்வூதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம். இதனுடன், இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதிய பலனையும் பெறலாம். என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், அத்தகைய சூழ்நிலையில் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் நாமினிக்கு செல்கிறது.
NPS கணக்கில் நாமினியின் பெயரை குறிப்பிடுவது அவசியம்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) விதிகளின்படி, என்பிஎஸ் கணக்கு (NPS Account) வைத்திருப்பவர் ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாமினிகளை தனது கணக்கில் சேர்க்கலாம். அதே நேரத்தில், நிதியின் முழு 100 சதவீத பங்கில், கணக்கு வைத்திருப்பவர் தனது தேவைக்கு ஏற்ப மூன்று நியமனதாரர்களிடையே நிதியை விநியோகிக்க முடியும். கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் இந்தப் பணம் நாமினிக்கு செல்லும். நாமினியைச் சேர்க்கும் போது, அனைவரின் பெயரையும் சரியாக உள்ளிடவும், இல்லையெனில் பணத்தைப் பெறுவதில் நாமினிகள் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இவர்களை என்பிஎஸ் கணக்கில் நாமினி ஆக்கலாம்
PFRDA விதிகளின்படி, என்பிஎஸ் (NPS) கணக்கு வைத்திருக்கும் ஒரு ஆண், தனது மனைவி, குழந்தைகள், பங்குதாரர், பெற்றோர் அல்லது அவரது இறந்த மகனின் மனைவியை நாமினியாக குறிப்பிடலாம். அதேசமயம், கணக்கு வைத்திருக்கும் ஒரு பெண் தனது கணவர், குழந்தைகள், பெற்றோர், கணவன் வீட்டு சொந்தங்கள் மற்றும் அவரது மகனின் விதவை மற்றும் குழந்தைகளை கணக்கில் பரிந்துரைக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. புதிய நாமினியின் பெயர் புதுப்பிக்கப்பட்டவுடன், பழைய பெயர் தானாகவே ரத்து செய்யப்படும்.
என்பிஎஸ் கணக்கில் நாமினியை புதுப்பிப்பது எப்படி
என்பிஎஸ் கணக்கில் நாமினியை புதுப்பிக்க இந்த செயல்முறைகளை பின்பற்றவும்.
1. NPS கணக்கில் நாமினியைப் புதுப்பிக்க, முதலில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cra-nsdl.com/CRA/ -க்கு செல்லவும்.
2. அடுத்து இங்கு டெமோகிராபிக் மாற்றங்கள் என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
3. இதற்குப் பிறகு, தனிப்பட்ட விவரங்களை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கே Add/Update Nomination ஆப்ஷனுக்குச் சென்று கன்ஃபர்ம் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. பின்னர் இங்கே உங்கள் NPS அடுக்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் நியமனச் செயல்முறையை (Nomination Process) முடிக்கவும்.
6. இதற்குப் பிறகு, நாமினியின் பெயர், உறவு, பிறந்த தேதி மற்றும் மீதமுள்ள பிற தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
7. அடுத்து, பதிவுசெய்யப்பட்ட நாமினி நிதியின் எவ்வளவு பங்கை பெறுவார் என்பதையும் நீங்கள் உள்ளிட வேண்டும்.
8. பிறகு உங்கள் NPS கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.
9. அதன் புறகு, நீங்கள் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வேண்டும். பின்னர் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணில் OTP வரும், அதை மீண்டும் ஒருமுறை உள்ளிடவும்.
10. OTP சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் NPS நியமனம், அதாவது என்பிஎஸ் நாமினேஷன் நிறைவடையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ