HSBC வியாழக்கிழமை கபேர் மக்லீனை அதன் ஆஸ்திரேலிய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1996 முதல் வங்கியுடன் பயணித்து வரும் மக்லியன், 2012 மற்றும் 2016-க்கு இடையில் HSBC ஜப்பானின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என பல மூத்த பாத்திரங்களை வகித்தார்.


பிராந்தியத்தின் சில்லறை மற்றும் வணிக வங்கி, செல்வ மேலாண்மை மற்றும் உலகளாவிய வங்கி சந்தைகளில் தனது பங்கை விரிவுபடுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருப்பதால், ஆஸ்திரேலிய சந்தைகளுக்கு மக்லீன் சிறப்பான வழிநடத்துனராக இருப்பார் என்று என்று HSBC நம்புகிறது.


HSBC ஆஸ்திரேலியாவில் 45 கிளைகள் மற்றும் அலுவலகங்களின் வலையமைப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த இந்த வலையமைப்பிற்கு மக்லீன் வரும் மார்ச் மாதத்தில் தலைமை தாங்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் துருக்கி நடவடிக்கைகளின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய மார்ட்டின் டிரிகாட் தற்போதைய பதவியில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜூன் 2019 முதல் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த நோயல் மெக்னமாரா, மக்லியன் பதவி ஏற்றவுடன் அந்த பிரிவின் தலைமை இடர் அதிகாரியாக தொடருவார் என்று HSBC மேலும் தெரிவித்துள்ளது.


HSBC, அதன் மிக முக்கியமான சந்தையான ஹாங்காங், கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது, ஏனெனில் இப்பகுதியில் பல மாதங்களாக அடிக்கடி வன்முறை, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு கடன் வழங்குபவரின் நடவடிக்கைகளை சீர்குலைந்து, லாபத்தை கடுமையாக தாக்கியுள்ளது. 


குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில், எதிர்ப்பாளர்கள் HSBC-ன் சில கிளைகளைத் தாக்கினர், மேலும் HSBC போராட்டக்காரர்களின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பணம் திரட்ட முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.


ஜப்பானில் கண்டுவரும் கடுமையான பின்னடைவுக்கு இடையில் தற்போது ஆஸ்திரேலியாவின் சந்தையினை மேம்படுத்த HSBC முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.