ரூ. 5 லட்சம் முதலீடு... மாதம் கையில் ரூ. 1.5 லட்சம் - அதிக லாபத்தை கொட்டும் பிஸினஸ்!
Business Idea: மொத்தம் 5 லட்ச ரூபாயில் ஒரு நல்ல டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை தொடங்குவதன் மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். அதுகுறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
Business Idea: சிறிய அளவிலான முதலீடு மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய சிறந்த வணிக யோசனைகளில் ஒன்று இந்தியாவில் உங்கள் சொந்த கேம் பார்லரை திறப்பது. அதாவது, பியூட்டி பார்லரை போன்று சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் அதிகம் விரும்பும் வீடியோ கேம்ஸ்களுக்கான பிரத்யேக இடம் தான். உங்கள் வணிகத்தை பதிவு செய்யவும், சரியான இருப்பிடத்தைக் கண்டறியவும், பணியாளர்களை வேலைக்கு எடுக்கவும், உங்கள் வணிகத்தை சந்தைப்படுத்தவும், சந்தையில் நிலவும் அபாயங்களை புரிந்துகொள்ளவும், உங்கள் சொந்த கேம் பார்லரை நடத்தவும் நிறைய வேலை மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படும். ஆனால் சரியான முன் தயாரிப்பின் மூலம், நீங்கள் தொழில்துறையில் வெற்றிபெறலாம்.
இந்தியாவில் உங்கள் சொந்த கேம் பார்லர் வணிகத்தை எவ்வாறு தொடங்குவது என்பதன் முழு விவரத்தையும் இங்கு காணலாம். சந்தை வாய்ப்புகள், முதலீடுகள், வணிகத் திட்டங்கள், உரிமங்கள் மற்றும் பதிவுகள், சந்தைப்படுத்தல், போட்டி, ஆபத்து மற்றும் வருவாய் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் இந்த தொழில் எப்படி?
இந்தியாவின் மிகச் சிறந்த சிறு வணிகக் கருத்துக்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இந்தியாவில் கேம் பார்லர் தொழிலைத் தொடங்க விரும்பினால் சரியான தளத்திற்கு வந்துவிட்டீர்கள் என அர்த்தம். இந்த குறைந்த விலை, அதிக வருவாய் ஈட்டும் வணிக யோசனைகளின் பட்டியலில் கேம் பார்லர் வணிகம் தொடர்பான பயனுள்ள தகவல்களை நீங்கள் கண்டறிவீர்கள். இந்த குறைந்த விலை நிறுவனத்தை பணம் சம்பாதிக்க விரும்பும் தொழில்முனைவோர் தொடங்கலாம். தொடங்குவதற்கான சிறந்த சிறு வணிகங்களில் இதுவும் ஒன்று.
மேலும் படிக்க | விஜய் மல்லையாவிடம் நிறுவனத்தை வாங்கி வேற லெவலில் வெற்றி கண்ட அபூர்வ சகோதரர்கள்!!
டிமாண்ட் இருக்கா?
கேமிங் பார்லர் துறையை நாம் கருத்தில் கொள்ளும்போது, இது மிகவும் புதிரான, சவாலான மற்றும் அற்புதமான முயற்சியாகத் தெரிகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கேம் பார்லர்கள் பிரபலமாக இருப்பதால், அவற்றுக்கான தேவை என்பது சந்தையில் பொதுவாக அதிகமாக இருக்கும். கேம் பார்லரில் பெரிய திரைகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு HD கேம்களை விளையாடலாம்.
கேம் விளையாடுபவர்களின் கைகள் அல்லது கால்கள் என முழுவதுமாக உள்ளடக்கிய ஏராளமான பார்வையிலேயே ஈர்க்கும் கேம்கள் உள்ளன. அதன் விளையாடும்போது வரும் உற்சாகமும், வெறியும் எதையும் ஒப்பிட முடியாதது. இந்த விளையாட்டுகள் அதிக செலவை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள் இதில் அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்ப்பார்கள். இதனால் தங்கள் குழந்தைகளை கேம் பார்லருக்கு அனுப்புகிறார்கள். இதுதான் அதன் தேவையை அதிகரித்திருக்கிறது.
வணிக உத்தி
ஒரு கேமிங் பார்லரை திறக்கும் ஐடியா உங்களுக்கு வந்தால், அந்த ஐடியா சரியானது தான். ஆனால் அதன் செலவுகள் கணிசமானவை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், கேம்களுக்கு அதிக தேவை இருப்பதால், நீங்கள் நிச்சயமாக இதில் பணம் சம்பாதிப்பீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். முதலில் இரண்டு அல்லது மூன்று கேம்களை வைத்து தொழில் தொடங்கி, அதன்பின் புது புது கேம்களை வாங்கி தொழிலை வளர்க்கலாம்.
முதலீட்டு விவரங்கள்
கேம் பார்லரில் முதலீட்டைப் பொறுத்தவரை, இது சுமார் 5 லட்சம் ரூபாய் வரை வரலாம். முதல் மாதத்தில், ஒரு நாளைக்கு 50 பயனர்கள் சாத்தியம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். நீங்கள் வங்கிக் கடனுக்கும் விண்ணப்பிக்கலாம் மற்றும் காலப்போக்கில் அந்த கடனுக்கான பணத்தையும் செலுத்தலாம்.
லாபம்
கேம் பார்லரில் லாபம் என நாம் பார்த்தால் அது பார்லர் நடத்துவதைப் பொறுத்தது தான் என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும், வல்லுநர்களின் கருத்துகளின்படி கேம் பார்லரின் லாப வரம்பு என்பது 40 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
மேலும் படிக்க | மருத்துவ குணம் நிறைந்த இந்த செடி... ரூ. 15 ஆயிரம் முதலீடு செய்து லட்சாதிபதி ஆகலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ