ICICI Lombard  699 ரூபாயில் ஒரு வருடத்திற்கான சுகாதார காப்பீட்டு திட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளது
ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் ஆன்லைன் ப்ரீபெய்ட் கார்டு பரிவர்த்தனை நிறுவனமான ப்ரீ பே கார்டுடன் (Free Pay Card)  இணைந்து சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்படி, ப்ரீ பே கார்டு வைத்திருப்பவர் விபத்துக்கு ஆளானால் அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தால், அவருக்கு  சுகாதார காப்பீடு (Health Insurance) மூலம் இழப்பீடு கிடைக்கும்


இந்த சுகாதார காப்பீட்டு திட்டம், Free Pay Card  அட்டை வைத்திருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


ICICI Lombard வழங்கும் இந்த சுகாதார காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சைக்கான பணம், இறப்பு நேர்ந்தால் இழப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சை மற்றும் பிற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சைக்கான இழப்பீடு கிடைக்கும்


மருத்துவமனையில் சிகிச்சைக்கான ரொக்க இழப்பீட்டின் கீழ், காப்பீட்டாளருக்கு மருத்துவமனையில் அதிகபட்சம் 30 நாட்களுக்கு ரூ .60,000 கிடைக்கும். ஒரு வருடத்திற்கு 699 ரூபாய் செலுத்தி, இந்த காப்பீட்டை பெறலாம். இந்த காப்பீடு நாட்டின் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும்  பெறும் சிகிச்சைகான இழப்பீடு வழங்கப்படும். 


ALSO READ | இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!


1 வருடத்திற்கு 699 ரூபாய் செலுத்துவதன் மூலம் தனிப்பட்ட விபத்து காப்பீட்டையும் பெறலாம். விபத்தில் மரணம் ஏற்பட்டால் பெற்றோருக்கு 90,000 ரூபாயும் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ரூ .10 லட்சம் ரூபாயும்  கிடைக்கும்.


காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மூளை காய்ச்சல் போன்றவற்றிற்கான சிகிச்சைக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் குறைந்தது 48 மணிநேர ஹாஸ்பிலைசேஷன் தேவை.


ப்ரீ பே கார்டு வைத்திருக்கும் 18 முதல் 65 வயது வரையிலான அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த காப்பீட்டை பெற எந்த மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை என்பதௌ. அட்டைதாரர்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப 3 அல்லது அதற்கு மேற்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து தங்களுக்கு ஏற்ற நல்ல காப்பீட்டு திட்டத்தை பெறலாம்.


ALSO READ | Good News: வெங்காயத்தின் விலை தீபாவளிக்கு முன் மேலும் குறையும்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR