Yes Bank-ல் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ICICI Bank முடிவு; 5% பங்கு சொந்தமானது
யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ஐசிஐசிஐ வங்கி முடிவு செய்துள்ளது.
புது டெல்லி: மீட்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆரம்ப கட்டமாக யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ஐசிஐசிஐ வங்கி முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதாவது யெஸ் வங்கியின் 100 கோடி பங்குகளை, ஒரு பங்குக்கு ரூ .10 என்ற அடிப்படையில் வாங்குவதாகவும். அதன் மூலம் சுமார் 5 சதவீத பங்குகளை தங்கள் வசம் இருக்கும் எனவும் ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.
நாட்டின் ஐந்தாவது பெரிய தனியார் துறை வங்கியான யெஸ் வங்கியின் நிதி நிலைமையில் கடுமையான சரிவைத் தொடர்ந்து, கடந்த வாரம் யெஸ் வங்கி திவால் என அறிவித்தது. மேலும் அந்த வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.