டெஸ்லா எலான் மஸ்க்குக்கு கர்நாடகா அழைப்பு! டிவிட்டரில் அழைப்பு விடுத்த எம்.பி பாட்டீல்
Karnataka Invites Tesla Elon Musk: டெஸ்லா மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், ஆதரவளிக்கவும் கர்நாடகா தயாராக உள்ளது
டெஸ்லாவின் விரிவாக்கத்திற்கு தனது மாநிலம் கர்நாடகா சிறந்த இடமாக உள்ளது என்று கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உள்கட்டமைப்பு அமைச்சர் எம்பி பாட்டீல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய கர்நாடக அமைச்சர் எலோன் மஸ்க்கை அழைக்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, தென் மாநிலத்தில் தொழில் தொடங்க எலான் மஸ்க்கை அழைத்துள்ளது. கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உள்கட்டமைப்பு அமைச்சர் எம்பி பாட்டீல் தனது ட்விட்டர் பதிவில், டெஸ்லாவின் விரிவாக்கத்திற்கு தனது மாநிலம் கர்நாடகா சிறந்த இடமாக உள்ளது என்று எழுதினார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு ஆலையை அமைக்க நினைத்தால், கர்நாடகா அதற்கு சரியான இடம் என்று கர்நாடக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பதிவில் எலோன் மஸ்கை டேக் செய்த பாட்டீல், "ஒரு முற்போக்கான மாநிலமாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் செழிப்பான மையமாகவும் கர்நாடகா உள்ளது. டெஸ்லா மற்றும் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட பிற முயற்சிகளுக்கு தேவையான வசதிகளையும் ஆதரவையும் வழங்க கர்நாடக அர்சு தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்
கர்நாடகா தொழில்நுட்பத்தின் மையமாக மாறுவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் அடுத்த தசாப்தங்களுக்கு மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல 5.0 ஐ உற்பத்தி செய்கிறது.
இதற்கிடையில், தனது அமெரிக்க அரசு பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைவர் மஸ்க் ஆகியோரை சந்தித்து, இந்தியாவில் மின்சார இயக்கம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வணிக விண்வெளித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மஸ்க், இந்தியாவின் எதிர்காலம் குறித்து அளவுக்கடந்த உற்சாகமாக இருப்பதாகவும், உலகின் மற்ற பெரிய நாடுகளை விட இந்தியாவுக்கு அதிக ஆற்றல் உள்ளது என்றும் கூறினார். அடுத்த ஆண்டு தற்காலிகமாக மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளேன் என்று கூறிய எலோன் மஸ்க், தான் அதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகச் சொன்னார்.
மேலும் படிக்க | DCGI: கொரோனா எமர்ஜென்சி இல்லாதபோது புதிய தடுப்பூசியை அங்கீகரித்தது ஏன்?
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மஸ்க், தனது கார் நிறுவனமான டெஸ்லா விரைவில் இந்தியாவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், எதிர்காலத்தில் சில அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த பின்னணியில் தான், கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உள்கட்டமைப்பு அமைச்சர் எம்பி பாட்டீல் தனது ட்விட்டர் பதிவில், டெஸ்லாவின் விரிவாக்கத்திற்கு தனது மாநிலம் கர்நாடகா சிறந்த இடமாக உள்ளது என்று எலோன் மஸ்கிற்கு கர்நாடகாவின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்.
அதிலும், வணிக விண்வெளித் துறை, டெஸ்லா கார் உற்பத்தி ஆலை போன்றவை துவங்கப்பட்டால், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் பல மாநிலங்களும் எலோன் மஸ்க் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று விரும்புகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ