கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், பினவரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நீங்கள் EPFO ​​இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளில் சில தளர்வுகள் அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ், PF கணக்கு வைத்திருப்பவருக்கு உடனடி உதவி வழங்கப்படுகிறது. 


READ | ஓய்வு பெறுவதற்கு முன்பு PF பணத்தை எடுக்க வேண்டுமா? EPFO விதிகளை அறிந்துக்கொள்க...


இதன்படி, மொத்த டெபாசிட் PF-ன் 75 சதவீத பணத்தை அல்லது கடந்த 3 மாதங்களின் PF ஊதியத்தில் குறைவாக இருக்கும் தொகையை ஊழியர்கள் உடனடியாக திரும்பப் பெறலாம். ஆனால் இதற்காக, நீங்கள் ஜூன் 30-க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


அரசாங்கத்தின் தளர்வு காரணமாக, EPFO ​​உங்களிடம் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணத்தை தற்போதைக்கு கேட்காது. ஆனால், சாதாரண நாட்களில் உங்களுக்கு ஏன் பணம் தேவைப்படுகிறது மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றுதல் போன்ற நடைமுறைகள் அவசியமாகிறது.


  • முதல் படி EPFO-ல் உள்நுழைதல்...


PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, நீங்கள் EPFO இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். இதற்கு உங்கள் வசம் உங்களில் UAN இருப்பது மிகவும் அவசியம். அத்துடன் ஆதார் உடன் இணைக்கப்பட்ட கணக்கு இருத்தல் வேண்டும்.


  • UAN தகவல்களை பூர்த்தி செய்தல்...


UAN மற்றும் கடவுச்சொல் உதவியுடன் UAN உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். பின்னர் ஆன்லைன் சேவை (Online Service) எனும் சேவையை தேர்ந்தெடுத்து Claim (Form-31, 19 & 10C) விருப்பதை தேர்வு செய்ய வேண்டும்.


READ | வெறும் 10 நாட்களில் EPFO-ல் இருந்து 280 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டது...


கோரப்படும் இடத்தில் வங்கி கணக்கு இலக்கத்தை உள்ளிட்டு சரிபார்ப்பு(Verify) என்பதைக் கிளிக் செய்க. பின்னர் Yes என்பதைக் கிளிக் செய்க. தொடர்ந்து Proceed For Online Claim விருப்பத்திற்குச் செல்ல வேண்டும்.


  • Form 31-ஐத் தேர்வுசெய்க


ஆன்லைனில் நிதிகளைத் திரும்பப் பெற, PF Advance (Form 31) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நாம் ஏன் பணத்தை எடுக்கிறோம் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். பின்னர் ஊழியரின் முகவரியையும் நிரப்பு பணத்தை திரும்ப பெருவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.


பின்னர், EPFO-ல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும். விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.  வழக்கமாக 15 முதல் 20 நாட்களில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இருப்பினும், கொரோனா நிலை காரணமாக தற்போது இந்த செயல்முறை வெறும் 72 மணி நேரத்திற்குள்ளாக முடிக்கப்படுகிறது.